Ad Widget

விசாரணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட விசாரணை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கும் பரிந்துரைகளுக்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகத் தீர்மானிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவம் நேற்றைய தினம் (வியாழக்கிமை) நாடாளு மன்றத்தில் விசாரணைக்கெடுத்துக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல,

குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்த மூத்த கல்வியியலாளர்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவுக்கு, பொறியியல் பீட சபை உறுப்பினரும், இலங்கை மின்சார சபையின் பிரதி பணிப்பாளருமான குணதிலக தலைமை தாங்குகிறார்.

மகளிர்மருத்துவத்துறை தலைவர் மருத்துவ கலாநிதி முகுந்தன், மருந்தியல்துறை தலைவர் மருத்துவ கலாநிதி நவரட்ணராஜா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு சமர்ப்பிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related Posts