யாழ்ப்பாண பல்கலைக்கழக நிலைமைகள் வழமைக்குத் திரும்பவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக கூறிய போதிலும் உண்மையில் இயல்பு நிலை ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தமிழ் சிங்கள மாணவர்களுடன் பேசியதாகவும் ஒவ்வொரு தரப்பினரும் மற்றைய தரப்பினர் மீது குற்றம் சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையில் சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு திரும்ப மாட்டார்கள் எனவும், நிலைமைகள் வழமைக்குத் திரும்ப சில காலம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.