Ad Widget

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் இன்னமும் செல்லவில்லை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் இன்னமும் செல்லவில்லை என சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிய போதிலும் சிங்கள மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை என பல்கலைக்கழகத்தின் சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் எஸ்.துசார என்ற மாணவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

யார் இல்லையென்றாலும் சிங்கள மாணவாகளுக்கு பல்கலைக்கழகத்தில் சிக்கல் நிலைமை காணப்படுகின்றது.

வீதியில் செல்லும் போது சிங்கள மாணவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்றுக்கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் இருக்கின்றோம்.

எமக்கு வீதியில் வைத்து ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் யார் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்வது?

பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வரையில் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல மாட்டார்கள்.

இந்த மோதல் காரணமாக நாம் இப்போது ஹைலைட் ஆகியுள்ளோம், தமிழ் மாணவர்கள் எம்மை வீடியோ எடுத்துள்ளார்கள்.

இது தொடர்பில் நாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தைச் சுற்றி இராணுவத்தை பாதுகாப்பில் ஈடுபடுத்துமாறு நாம் கோருகின்றோம்.

தமிழ் மாணவர்கள் இராணுவத்திற்கு மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர். தமிழ் மாணவர்கள் பொலிஸாருக்கு பயமில்லை.

நாம் பல்கலைக்கழகம் வந்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன, தமிழ் மாணவர்கள் மத்தியில் பாரிய மாற்றத்தை நாம் அவதானிக்கின்றோம்.

சில தினங்களுக்கு முன்னதாக பொலிஸ் மா அதிபர், துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.

அதன் போது மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரியிருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts