தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டதாக கூறப்படும் நபர்கள் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, தயா மாஸ்டருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தயா மாஸ்டர் தற்போது, யாழ் பகுதியிலுள்ள தனியார் ஊடகம் ஒன்றில் கடமை புரிவதாக தெரியவந்துள்ளது.
