Ad Widget

பொரு­ளா­தார மத்­திய நிலை­யம்: இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தை­யி­லேயே அமைக்­க­வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி இன்று முதல் தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் (வயது 73) என்­பவர் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்ளார்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்டபாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் இந்த தக­வலை பாரா­ளு­மன்­றத்தில் நேற்று நிதி முகா­மைத்­துவம் (பொறுப்பு திருத்தச்) சட்­ட­மு­லத்தின் இராண்டாம் மதிப்­பீடு தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில் வெளியிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலையம் அமைக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­பட்டே அர­சாங்­கத்­தினால் வரவு செல­வுத்­திட்­டத்தில் நிதி ஒதுக்­கப்­பட்­டது. அந்த நிலையம் வவு­னியா மாவட்­டத்தில் அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. ஆனால் தற்­போது வரையில் இந்தப் பிரச்­சினை முடி­வ­தாக இல்லை.

தற்­போது மாங்­கு­ளத்தில் ஒன்றும், மன்னார் மாவட்­டத்­திற்கு ஒன்­று­மாக இரண்டு பொரு­ளா­தார மத்­திய நிலை­யங்கள் அமைக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. உண்­மை­யி­லேயே வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ள­தார நிலையம் என்றால் எவ்­வாறு கூறு­போட்டு இரண்­டாக அமைக்­க­மு­டியும். ஆகவே மன்னார், வவு­னியா மாவட்­டங்­க­ளுக்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யமா அல்­லது வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ள­தார நிலை­யமா என்­பது தொடர்பில் தெளி­வற்ற தன்­மை­யொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தையில் உள்ள அரச வீட்­டுத்­திட்ட பகு­திக்கு அண்­மையில் அமைப்­ப­தென வவு­னியா மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டத்தில் ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு இவ்­வி­டத்தில் அமைப்­பது தொடர்­பாக ஆராய்ந்த நிபு­ணர்­குழு பூரண அறிக்­கை­யொன்­றையும் சமர்ப்­பித்­துள்­ளது.

மேலும் வடக்கு மாகாண மக்கள் பிர­தி­நி­தி­க­ளி­டையே நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்­பிலும் இவ்­வி­டத்தில் அமைப்­ப­தற்கு பெரும்­பான்­மை­யான ஆத­ரவு கிடைத்­துள்­ளது. இவ்­வா­றான நிலை­யி­லேயே இரண்டு இடங்­களில் அமைப்­ப­தற்­கு­ரிய தீர்­மா­னத்தை அர­சாங்கம் எடுத்­துள்­ளது. இதனை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்­ள­மு­டியும்?

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார நிலை­யத்தை அமைப்­பது குறித்து அர­சாங்கம் கொள்கை ரீதி­யான தீர்­மா­ன­மொன்றை எடுக்­க­வேண்டும். பெரும்­பான்மை கருத்­துக்கும் தீர்­மா­னத்­திற்கும் மதிப்­ப­ளிக்­க­வேண்டும். அத­னை­வி­டுத்து ஏதேச்­ச­தி­கா­ர­மாக சில நபர்­களின் நலன்­களை திருப்­ப­திப்­ப­டுத்தும் வகையில் தீர்­மா­னங்­களை எடுக்க கூடாது.

இவ்­வா­றி­ருக்­கையில் வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலையம் ஓமந்­தை­யி­லேயே அமை­ய­வேண்டும் என்­பதை வலியுறுத்தி நாளையதினம் முதல்(இன்று) தமோதரம்பிள்ளை மகேஸ்வரன் (வயது 73) எனும் முதியவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொள்வுள்ளார். ஆகவே பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் உகந்த இடத்திலேயே இந்த மத்திய நிலையம் அமையவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு உரிய தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவேண்டியது அவசியமாகும் என்றார்.

Related Posts