- Sunday
- August 16th, 2026
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பெரும்பாலும் வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வரவு-செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
தென்பகுதி மக்கள் சமஷ்டி ஆட்சிக்கும், வடக்கு மக்கள் ஒற்றையாட்சிக்கும் அச்சப்படுவதாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற இரண்டு சொற்பதங்கள் தொடர்பாக வாதம் நடத்திக்கொண்டிருப்பதை விட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய முறை தொடர்பில்...
கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் யாழில் தொடரும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். யாழில் அண்மைக் காலமாக தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதங்களை தொடர்ந்து, பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் யாழில் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளின்...
அமெரிக்க மற்றும் இந்திய மருத்துவ குழுவினால் தெல்லிப்பளை வைத்திய சாலையில் இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது. இதன்படி ஐம்பது பேர் பதிவு செய்துள்ளதாகவும், அதில் நேற்று (வியாழக்கிழமை) வரை முப்பது பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறித்த சத்திர சிகிச்சை குழு தெரிவித்துள்ளது. சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 100ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும்...
ஸ்ரீலங்கா அரசினால் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் கட்சியின் பொருளாளர் ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் ஆங்கில...
தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ATM) மூலம் பணம் மீளப்பெறும் போது அறவிடப்படும் கட்டணம் 10 ரூபவாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட வாசிப்பின் போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இது தொடர்பாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
உலக நீரிழிவு தினமானது வருடந்தோறும் நவம்பர் மாதம் 14ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய உலகை உலுக்கி வரும் தொற்றா நோய்களுள் மிக முக்கிய இடத்தை வகிப்பது நீரிழிவு நோயாகும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் தேக அப்பியாசமற்ற வாழ்க்கை முறை என்பவற்றினால் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் தாக்கம் இன்று பல்கிப் பெருகி...
பல்கலைக்கழகத்தில் கற்கும் வாய்ப்பை ஒரு சில புள்ளிகளால் தவறவிட்ட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் உயர்கல்வியை தொடர்வதற்காக, 8 இலட்சம் ரூபா வரை கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இத் திட்டத்தில் 15 ஆயிரம் மாணவர்களை உள்ளீர்த்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் வரவு செலவுத்...
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி வருவதாக ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார். வடமாகாண முதலமைச்சராக பதவி வகிக்கும் விக்னேஸ்வரன், இதுவரை தனது முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ள ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர், தனது இயலாமையை மூடி மறைப்பதற்கே அவர் தற்போது...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவத்தில் காயமடைந்த சிங்கள மாணவன் தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கான விச ஊசி மருத்துவ பரிசோதனையில் இதுவரை 193 முன்னாள் போராளிகள் மாத்திரமே பங்கேற்றுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடமாகாண வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகின்றது. இதன்படி பத்தாவது வாரமாக மருத்துவ பரிசோதனை...
வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 13 இலட்சத்து 28ஆயிரத்து ஐநூற்றி ஐந்து லீற்றர் மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஒக்ரோபர் மாதம் வரையுமே பதின்மூன்று இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐந்நூற்றி ஐந்து லீற்றர் மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த மதுபானத்தில் பியர் வகை மதுபானமே அதிளவாக...
பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் மக்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு குறைக்கப்படவில்லை என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நேற்று சமர்க்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்ட அவர் நாடெங்கும் 30,000 தொண்டர் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வடக்கில் 10 வருட காலமாக சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக இவர்கள் பாடுபட்டு...
ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் கபில்தாஸ் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். பொலிஸ் நிலையத்தின் 4 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரால் கொக்குவில் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவர்...
எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை, நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு, இலங்கையின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த சமூக அபிவிருத்திக்காக பரந்த கொள்கையை அறிமுகம்...
எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்ட உரை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியேரின் தமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் தற்போது வாசிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அறிவை...
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமான மலர்க் கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை 11ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. வடமாகாண சுற்றாடல் அமைச்சால் தாவர உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களின் பங்கேற்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கண்காட்சியைப் பார்வையிடத் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவதோடு மரக்கன்றுகளையும் பூச்செடிகளையும் வாங்கிச் செல்கின்றனர். கடந்த...
நல்லாட்சி அரசாங்கத்தினால் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், வரவு செலவுத் திட்டத்திற்கென இன்று முற்பகல் விசேடமாக கூடிய அமைச்சரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நிதியாண்டுக்கான குறித்த வரவு செலவுத் திட்டம்...
கடலோரப் பாதுகாப்புக்கள் மிகவும் இறுக்கப்பட்டுள்ள நிலையில், கடல் வழியாக கஞ்சா வட பகுதிக்கு எவ்வாறு எடுத்து வரப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். போராட்ட காலங்களில் மிக அமைதியாகக் காணப்பட்ட வட பகுதி இன்று கேரள கஞ்சா வர்த்தகத்தின் வர்த்தக மையமாக உருவாகியிருப்பது கவலையைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கில் 1 இலட்சத்து 50...
வட்டுக்கோட்டை சித்தன்கேணி பிரதேசத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரை சிற்றூந்தில் பயணித்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.தனது தந்தையுடன் வீட்டில் தங்கியிருந்த போது குறித்த யுவதி கடத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவதியின் காதலன் என்று தன்னை அடையாளப்படுத்தி , யுவதியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ளார், எனினும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாக...
Loading posts...
All posts loaded
No more posts
