இனவாதிகளுக்காக சிறுபான்மை இனத்தவரை வீதியில் இறக்கக் கூடாது ; விஜயகலா

நல்லாட்சி அரசாங்கம் ஓரிரு இனவாதிகளுக்காக சிறுபான்மை இனத்தவரை வீதியில் இறக்கக்கூடாது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்தை விமர்சித்து நல்லாட்சியை முடக்குவதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், இதனால் எதிர்கட்சியினர் தமது தனிப்பட்ட தேவைக்காக மக்களை வீதியில் இறக்குவதற்கு முஸ்தீபுகளை மேற்கொள்வதாகவும், இவற்றுக்கு...

முன்னாள் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவரேனும் சமூக விரோதச் செயற்பாடுகளிலோ அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் நடவடிக்கையிலோ ஈடுபடவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வி அளித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, இதனை பொலிஸ் அறிக்கைகளிலும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று...
Ad Widget

திருவாசகம் சிங்களத்தில்! நல்லூரில் வெளியீடு!

சைவசமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின்சிங்கள மொழிபெயர்ப்பு நூல் எதிர்வரும்-20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டிநடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வை முன்னிட்டுமேற்படி நூல் வெளியிடப்படவுள்ளது. ஏழு நூல்களைத் தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழி...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 355 பணியாளர் வெற்றிடம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச நிர்வாகங்களில் 1099 பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 744 பணியாளர்களே கடமையாற்றுவதனால் 355 பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின்கீழ் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் என்பவனவற்றிலேயே குறித்த பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இதன் பிரகாரம் மாவட்டச் செயலகத்தில் 203 பணியாளர்கள் பணிபுரிய வேண்டிய...

மீண்டும் ஒரு எழுக தமிழ் எழுக்கூடாது என தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள் !

யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது போன்ற எழுக தமிழ் பேரணி மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் மிக்க கவனமாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள்...

தமிழர்கள் அனைவரும் புலிகளே!

தமிழர்கள் அனைவரும் புலிகள் என திட்டிய மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழ் மக்கள் உட்பட கெகலியாமடு கிராமசேவகர் மற்றும் அதிகாரிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை...

யாழ் நகரில் சுகாதார சீர்கேடு

யாழ் மாநகரசபை தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டு வருவதால் தற்போது யாழ் நகரில் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றது. குறிப்பாக யாழ் நகரப் பகுதியில் உள்ள உணவகங்களின் கழிவுகள், துர்நாற்றம் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்காடி வியாபாரிகளின் கழிவுப் பொருட்கள், ஏனைய கடைகளின் கழிவுப் பொருட்கள் அங்காங்கே தேங்கி காணப்படுகின்றன. எனவே...

யாழில் கைகோர்ப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம்

நாட்டிலுள்ள சகல இனத்தவர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ள கைகோர்ப்பு எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் வெற்றியளித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கை கோர்ப்பு எனும் நல்லிணக்கத்திற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இனங்களிற்கிடையில் புரிந்துணர்வை...

பொலிஸ் அதிகாரியின் வீடுடைத்து திருட்டு!

கரவெட்டிப் பகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீடு பட்டப்பகலில் உடைக்கப்பட்டு அங்கிருந்த 4 1/2 பவுண் தங்கநகை திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. விக்கினேஸ்வரா வீதி சண்டிக்குளம் பகுதியில் உள்ள வீட்டினை நேற்றுக் காலை பூட்டி விட்டு சென்றவர்கள் முற்பகல் 10.00 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீடு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளமை தெரியவந்தது. வீட்டின் மதிலால்...

மரநடுகை மாதத்தை முன்னிட்டு மன்னாரில் 1000 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள்

மரநடுகை மாதத்தை முன்னிட்டு மன்னாரில் 1000 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11.11.2016) நடைபெற்ற மரநடுகை மாத நிகழ்ச்சியில் வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்துள்ளார். வடமாகாணசபை கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து கார்த்திகை...

வடக்கு கிழக்கின் 100 விஹாரைகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன

வடக்கு கிழக்கு மாகாணங்களில் 100 விஹாரைகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 100 பௌத்த விஹாரைகளை அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தெரிவு செய்யப்பட்ட 100 விஹாரைகளில் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. சீன பௌத்த விஹாரையொன்றினால் வழங்கப்பட்ட நிதியின் அடிப்படையில்...

கிளிநொச்சியில் இடம்பெறும் தொடா் கைதுகள்

யாழ் பல்கலைகழக மாணவா்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25 ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின் போது கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவா்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றாா்கள். இதுவரை மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனையவா்களையும் கைது செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களில் வெளியான...

பொருத்துவீட்டு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்காது : சுமந்திரன்

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கு பொருத்து வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சு முனைந்துவருவதாக நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையான செலவீனத்தை விட மூன்று மடங்கு அதிக நிதியை செலவுசெய்து 65 ஆயிரம்...

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

தமிழ் மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ள மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார். வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான முதல் நாள் விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி...

வரவு செலவு திட்டத்தில் வாகனங்களின் விலை மாற்றம்

வரவு செலவு திட்ட வரி திருத்தங்களுக்கு அமைய சில வாகனங்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே இதுபற்றி தெரிவிக்கையில், இயந்திர சிலின்டர் கொள்ளளவு 1000 சி.சி. வரையான மோட்டர் வாகன அலகு ஒன்றுக்கான வரி 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதன்படி மெரிட்...

ஆவா குழு உறுப்பினர்கள் மேலும் நால்வருக்கு விளக்கமறியல்

ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நான்குபேரை எதிர்வரும் 16 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல உத்தரவிட்டுள்ளார். ரவிந்திரன் நிதர்ஷன், லோகநாதன் தர்ஷிகன், மகாதேவன் கந்தகன் மற்றும் ரவிந்திரன் நிலூஷன் ஆகியோரே விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஆவா குழு தொடர்பில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை மூவரும்,...

வரவுசெலவு திட்டம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்

2017 ம் ஆண்டுற்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்வதற்காக நிதியமைச்சினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கள மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள 071 024 2311 என்ற இலக்கமும், சிங்களம் மற்றும் ஆங்கில...

வடமராட்சியில் நாளை கையெழுத்து போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நிற்கும் தேசிய அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து நாளை (சனிக்கிழமை) வடமராட்சியில் கையெழுத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான யாழ்ப்பாணத்தின் இணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த கையெழுத்து போராட்டமானது,...

அரசை எச்சரிக்கும் வடக்கு மீனவர்கள்!

கடலை நம்பி வாழ்க்கை நடத்தும் வட மாகாண தமிழ், முஸ்லிம் மீனவர்களின் பிரச்சினைக்கு அரசு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் தாம் எப்போதும் அமைதியாக காத்திருக்கப் போவதில்லை என்றும் மன்னார் மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் மொஹமட் ஆலம் வலியுறுத்தியுள்ளார். மன்னார் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவிற்கும், மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இடையிலான...

வானொலிக்குள் கைக்குண்டு!

வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவரால் நடாத்திவரப்படும் கடையில் வானொலிக்குள் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 40 வயதுடைய பி. மகிந்தன் என்பவர் கடந்த 3 வருடங்களாக இலத்திரனியல் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். பழைய பொருட்களைச் சேகரிக்கும் நபர்...
Loading posts...

All posts loaded

No more posts