10 மாதத்தில் 13 இலட்சம் லீற்றர் மதுபானம் விற்று சாதனை!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 13 இலட்சத்து 28ஆயிரத்து ஐநூற்றி ஐந்து லீற்றர் மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஒக்ரோபர் மாதம் வரையுமே பதின்மூன்று இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐந்நூற்றி ஐந்து லீற்றர் மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த மதுபானத்தில் பியர் வகை மதுபானமே அதிளவாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 1 இலட்சத்து 71ஆயிரம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், வெளி மாவட்ட மக்கள் வவுனியா மாவட்டத்துக்கு வந்து செல்வதாலேயே மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Posts