- Sunday
- August 16th, 2026
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே ஆவா குழுவை உருவாக்கி வழிநடத்தியதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மீண்டும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் ஆவா குழுவிற்கும் கோட்டாபய மற்றும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இல்லை என...
யாழ்ப்பாணத்தை அண்மைய காலமாக கதிகலங்க வைத்து வரும் ஆவா எனப்படும் குழுவின் பின்னணியில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரே செயற்பட்டு வருவதாக அரசாங்கத்தின் அமைச்சர்களே தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் இராணுவ தளபதியான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளார். ஆவா குழு தொடர்பில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஒரு இனவாதி என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அழைத்துள்ளார். ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று யாழ்ப்பாணத்தில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர் என்றும், எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு...
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின் காலணிகள் பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-11-2016 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்பு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை கல்விக் கேட்டத்திற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11...
தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவிய குடியரசுக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததையிட்டு சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சி வெனியிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் அமெரிக்க அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளநிலையில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ அவருக்கு வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘உங்களின் ஆட்சியில்...
எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் இந்த ஆண்டில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்த வாய்ப்புகள் உள்ளதாகவும், கிழக்கு, வடமத்திய...
விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளை கூடுதல் விலைகளில் விற்றால் அவை தொடர்பில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்து விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை வழங்க, சுகாதார அமைச்சினால் விசேட தொலைபேசி இலக்கங்கள்...
வடக்கில் ஒவ்வொரு புதிய விடயத்திற்கும் சர்வதேசத்தின் தலையீட்டை எதிர்பார்க்கும் ஒரு புதிய வியாதி உருவாகியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடக்கில் ஒழுங்கான ஆட்சி நிலை இல்லையெனவும், அதற்காக சர்வதேசத்தின் உதவியைப் பெறவேண்டுமெனவும் அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இக்கருத்து வடக்கு மாகாண ஆளுநர்...
கனேடிய வெளிவிவகாரங்கள் (வெளிநாட்டு அலுவல்கள், வியாபாரம் மற்றும் அபிவிருத்திப்பிரிவு) ஆய்வாளர் மக்லாரன் மற்றும் கனேடிய அரசியல் உயர் ஆலோசகர் அலுவலகத்தின் ஆய்வாளர் ஜவாத் குரேஷி ஆகியோர் இன்றைய தினம்(09) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ் மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம்...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிற்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தனது வாழ்த்தினை கூறியுள்ளார். அத்துடன், இலங்கை அரசாங்கம் அவருடன் இணைந்து...
யாழ் மாநகர சபையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிவரும் சுகாதார தொழிலாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி (07.11.2016) காலை முதல் யாழ் மாநகரசபைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் யாழ்.மாநகர பகுதி உட்பட மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பல பொது இடங்களிலும் குப்பைகள் பாரியவில்...
அண்மையில் யாழில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவனான சுலக்ஷனின் நினைவாக, பேரூந்து தரிப்பிடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று (புதன்கிழமை) நாட்டிவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் அமைக்கப்படவுள்ள குறித்த பேரூந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாட்டிவைத்தார். இந்நிகழ்வில், வலிதெற்கு பிரதேச சபை முன்னாள் தலைவர் பிரகாஸ், வலிதெற்கு பிரதேச சபை...
சித்தன்கேணி - அந்திராணி வாய்க்கால், சங்கரத்தை பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அந்திராணி வாய்க்கால் வீதியில் இளைஞர்கள் மூவர் துவிச்சக்கர வண்டியில் வேலை முடித்து வீடு...
வெளிநாடு சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார்...
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரி.ஐ.டி என அழைக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு – செட்டிகுறிச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிதுஷன் என்ற இளைஞன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதை அவர்களது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அவரை கைது செய்தமைக்கான ஆவணத்தை கையளித்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்றுப் பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போதே, இந்த அனுமதி தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் கொன்சியூலர் அலுவலகங்கள் இரண்டை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. வவுனியாவை விடவும் யாழ்ப்பாணம் சிறந்தது என்றும் இதன்போது அறிவிப்பு விடுக்கப்பட்டது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போதே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
'ஆவா' என்ற பெயரில் குழுவொன்றை அமைத்து, யாழ்ப்பாணத்தில் வன்முறையைத் துண்டிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்காக தற்போது மொத்தம் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு வடக்கையும் அச்சுறுத்தும் 'ஆவா குறூப்' எனும் குழு வின் பின்னணியில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே உள்ளதாகவும் அவர்களது ஆலோசனைகளுக்கு அமைவாகவே அக்குழு செயற்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. ஆவா குழு தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்...
ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (08/11/2016) கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர் தேசிய...
Loading posts...
All posts loaded
No more posts
