முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே ஆவா குழுவை உருவாக்கி வழிநடத்தியதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் ஆவா குழுவிற்கும் கோட்டாபய மற்றும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இல்லை என கூறிவரும் நிலையிலேயே அமைச்சர் ராஜித இந்த குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்திருக்கின்றார்.
கோட்டாபய செய்த கொடூரங்களை கூறினால் அதனை இராணுவத்தினருடன் தொடர்புபடுத்தி எதற்காக பார்க்கின்றனர் என்ற கேள்வியையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது சக அமைச்சர்களிடம் எழுப்பியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனராத்ன, இந்த கருத்துக்களை தெரிவித்ததுடன், ஆவா குழுவில் இருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.