Ad Widget

வடக்கில் கோட்டா துணை இராணுவக் குழுக்களை அமைத்து செயற்பட்டார்: சரத் பொன்சேகா

யாழ்ப்பாணத்தை அண்மைய காலமாக கதிகலங்க வைத்து வரும் ஆவா எனப்படும் குழுவின் பின்னணியில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரே செயற்பட்டு வருவதாக அரசாங்கத்தின் அமைச்சர்களே தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் இராணுவ தளபதியான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளார்.

ஆவா குழு தொடர்பில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆவா குழுவுடன் இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லையென குறிப்பிட்ட சரத் பொன்சேகா, தாம் போர்க்களத்தில் இருந்தபோது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா, வடக்கு கிழக்கில் துணை இராணுவ குழுக்களை அமைத்து செயற்பட்டதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கோட்டாவே பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோருடனும் இணைந்து செயற்பட்டதாகவும், ஆவா குழுவுடன் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் இருந்தால் நிச்சயமாக அதற்குப் பின்னால் கோட்டாவே இருக்க வேண்டுமெனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts