உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆலய விக்கிரகங்கள் திருட்டு

அண்மையில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்த சாமி விக்கிரகங்கள் சில நாட்களில் காணமற்போயுள்ளன. மேலும் சுவாமி வாகனங்கள் , மணிகள் பெறுமதியான பொழிகற்கள் என்பனவையும் ஆலயத்திலிருந்து திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர்...

ஆவா குழு முக்கியஸ்தர் கைது?

யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இவரை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸார் காங்கேசன்துறையில் வைத்து நேற்று பிற்பகல் வேளையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கியஸ்தரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மையில் ஆவா குழுவுடன்...
Ad Widget

வடபகுதி மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக அமையவேண்டும்

வடபகுதி மக்களின் ஒற்றுமை சகல மக்களுக்கும் முன்மாதிரியாக அமையவேண்டுமென தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஒற்றுமையே தற்போது அவசியமான ஒன்றென சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக கடைத்தொகுதியை, அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கிளி.வர்த்தகர்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கையளித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”யாவரதும் ஒத்துழைப்பே இன்றைய காலகட்டத்தில் வடமாகாணத்தின் தேவையாக...

கிளிநொச்சி பொதுச் சந்தை வடக்கு முதலமைச்சரால் திறந்துவைப்பு!

கிளிநொச்சி பொதுச்சந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்துள்ளார். கடந்த செப்ரெம்பர் மாதம் 16ஆம் திகதி கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் 110 வர்த்தக நிலையங்கள் முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளன. இதனையடுத்து நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு தலா 20ஆயிரம் ரூபா...

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்களை மூடுமாறு கோரிக்கை!

இராணுவத்தினர் வடக்கு மாகாணத்தில் நடாத்திவரும் சிகையலங்கரிப்பு நிலையங்களை மூடுமாறு கோரிக்கை விடுத்துள்ள சிகையலங்கரிப்பாளர்கள் அதற்கு ஒரு மாதகால அவகாசமும் வழங்கியுள்ளனர். வவுனியா முத்தையா மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வடமாகாண சிகை அலங்கரிப்பாளர் சங்க பொதுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிகை அலங்கார சங்கத்தின் தலைவர் கே. நாகராசா தெரிவித்தார். இப்பொதுக்கூட்டத்தில் வடக்கு மாகாணத்திலுள்ள...

நெல்சிப் ஊழல் விசாரணை அறிக்கை வடமாகாண சபையில் கையளிப்பு!

நெல்சிப் திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை நிதிக்குற்ற பிரிவிடம் ஒப்படைப்பதற்கு வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை நடாத்திய மாகாண சபை குழு சபையில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. வடமாகாணத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல்...

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு பிரித்தானியா உதவி

இலங்கையின் வடக்கு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக 1.5 மில்லியன் பவுன் நிதியுதவியை பிரித்தானியா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் பரோனஸ் அனேலே இதனைக் கூறியுள்ளார்.

பிரசவத்தின் போது பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம்!

பிரசவத்தின் போது பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள கர்ப்பிணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. பிரவசத்தின் போது கர்ப்பிணிகள் தங்களது மனோதிடத்தை வலுப்படுத்திக்கொள்ள தமக்கு விருப்பான பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணத்துவ மருத்துவர் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற...

வித்யா கொலை வழக்குடன் தெடர்புடைய பொலிஸ் அதிகாரி அவுஸ்திரேலியா செல்ல முயற்சி?

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு அவுஸ்திரேலியாவுக்கான விசா வழங்குவதனை இலங்கையின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிராகரித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபரை விடுவிக்குமாறு பொலிஸாருக்கு ஆலாசனை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....

ஆவா குழு சந்தேகநபர்கள் கைது : ஜெனீவாவில் முறைப்பாடு

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறித்து ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் இயங்கி வரும் ஆவா என்ற பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சிலரைக் கைது செய்திருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களின் உறவினர்கள் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்....

ஆவா குழு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வரும் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர்கள், இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான்...

தனியார் பேரூந்து, இபோச பேரூந்து விபத்து !! இருவர் படுகாயம்!!

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான காரைநகர் பேரூந்து தனியார் பேரூந்தை ஆலடி சைவமகாசபை அண்மித்த பகுதியில் மோதி தள்ளியுள்ளதுடன்.இருவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த இருவரும் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதர்க்கான நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருவதாகவும் அறிய முடிகின்றது. ஆலடி சைவமகாசபை அண்மித்த...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்ற போதிலும் பொலிஸில் முறையிட மக்கள் தயக்கம்!

'யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்ற போதிலும், பொலிஸ் முறைபாடுகள் குறைவடைந்தமைக்கு சமூகக் கட்டுப்பாடுகளே காரணம்' என யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் பார்னஸ் ஆன்லேக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட மேற்படி இராஜாங்க அமைச்சர், திங்கட்கிழமை (07) யாழ்ப்பாணத்துக்கு விஜயம்...

வட மாகாண சபையில் வாய்த்தர்க்கம்!

சிறப்புரிமை தொடர்பாக வட மாகாண சபையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கிச் செல்ல முற்பட்டுள்ளார். எனினும் சக உறுப்பினர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. வட மாகாண சபையின் 65ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகின்றது. இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரை குறித்து...

ஆவா குழு என்பது ஒரு மாயை!! கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவன் சட்டத்துறை மாணவன் : வி.மணிவண்ணன்

ஆவா குழு என்பது ஒரு மாயை. அந்த மாயை குழுவினைக் கொண்டு அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்து உள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,...

யாழ் மாணவர்களின் கொலையை நியாயப்படுத்தவே ஆவா குழுவின் கைது : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

யாழில் பதற்றமான ஒரு நிலைமை உள்ளதாகவும், அங்கு ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக காண்பிக்கவும், இந்த அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இதற்காகவே ஆவா குழு என்று கூறி கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...

வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்: முதலமைச்சர் சி.வி

வடக்கில் சில குழுக்கள் பாராதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம் என கவலை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஆவா குழு பற்றி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆவா குழுவை பற்றி பூரண விசாரணை நடத்தாமல் அதன்...

வவுனியாவில் கொள்வனவு செய்யப்படும் அரிசி யாழில் அதிக விலையில் விற்பனை

வவுனியாவில் கொள்வனவு செய்யும் அரிசியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்வதனால் யாழ். மாவட்ட நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் உள்ள அரிசி ஆலைகளில் கொள்வனவு செய்யப்படும் அரிசிகளில்...

கவனயீர்ப்புப் போராட்டம் நடத்த ஏழு கட்சிகள் தீர்மானம்

வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் ஓர் அச்ச சூழ்நிலையை உருவாக்குவோருக்கு எதிராகவும், அவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்துவதற்கு ஏழு கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ். குடாநாட்டைப் பதற்றசூழலில் தொடர்ந்து வைக்க முயலும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலை விரிவாக ஆராய, ஆறு தமிழ்க் கட்சிகளை அழைத்து, ரெலோ நடத்திய இரண்டு...

உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஊடகவியலாளர்களே காரணம் : முதலமைச்சர் சி.வி

“எனது உயிருக்கு, பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மேலதிக பாதுகாப்பை அரசாங்கத்திடம் கோரவேண்டிய நிலைமைக்கு நான் தள்ளப்பட்டேன், இவற்றுக்கெல்லாம் சில ஊடகவியலாளர்கள் தவறாகவும் மற்றும் திரிவு படுத்தியும், செய்திகளை வெளியிட்டமையே காரணமாகும்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளரான நடேஷபிள்ளை வித்தியாதரனினால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகையின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்...
Loading posts...

All posts loaded

No more posts