- Sunday
- August 16th, 2026
வௌ்ளவத்தையில் சில பகுதிகளில் பொலிஸ் பதிவு மேற்கொள்வதற்காக, பொலிஸாரால் படிவங்கள், நேற்றுத் திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே, யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதிகளிலும், இவ்வாறான பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று, அதன் மூலமாக மக்களுக்கு இடர்கள் ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் பொலிஸ் பதிவு மேற்கொள்ளப்படுகிறதா என, மக்கள்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக ஐ.நா. மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனெஸ் அனெலி தெரிவித்துள்ளார் . வடக்கு கிழக்கில் மனித உரிமைகள் மற்றும் உதவி தேவைப்படும் சிறுவர்கள் பெண்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். யாழ்...
சிறுப்பிட்டி பகுதியில் இரு தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 14 இராணுவத்தினருக்கும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை நேற்று யாழ் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவருவதாவது, மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம்...
ஒமானில் இலங்கை பணிப்பெண்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். இலங்கை பணிப்பெண்கள் எந்த வகையில் சட்டவிரோதமாக ஒமானுக்குள் பிரவேசிக்கின்றார்கள் என்பது தொடர்பில் விசாரணைகளை நடாத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைகளுக்காக ஒமானிலுள்ள...
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள சட்டமூலத்தினால் ஸ்ரீலங்காவில் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் உட்பட கொடூரங்கள் மேலும் மோசமடையும் என அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது. ஸ்ரீலங்காவில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் காவல்துறை உட்பட படைத்தரப்பினர் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளில்...
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் மற்றும் ஈரோஸ் ஆகிய ஆயுதக் குழுக்களுக்கு, இந்திய இராணுவம் ஆயுதங்களை வழங்கியதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவ்வேளையில், நாங்கள் நாட்டில் இருக்கவில்லை. இந்தியாவில் இருந்தோம் என்றார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (07)...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய இளைஞரை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பொலிஸார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். கைது செய்தமைக்கான ஆதாரங்களைக்கூட அவர்கள் வழங்கவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது குறித்து கட்சி உறுப்பினர்கள் எமது தளத்துக்கு தகவல் தருகையில் , கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் கட்சியினருடன்...
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த ஐந்து பொலிஸாரையும், தொடர்ந்தும் எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை மற்றும் யாழில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து நீதியான விசாரணைக்கு கோரிக்கை விடுப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணிலை சந்திப்பதற்கு ஏழு கட்சிகள் தீர்மானித்துள்ளன. ரெலோ அமைப்பின் அழைப்பின் பேரில் யாழ்.வல்லைவெளியில் அமைந்துள்ள விடுதியொன்றில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலைக்...
கடந்த மாதம் யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோருக்கு, யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ் அஞ்சலி நிகழ்வு, இன்று (திங்கட்கிழமை) நண்பகல் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது. உயிரிழந்த மாணவர்களுக்கு இதன்போது மலரஞ்சலி இடம்பெற்றதோடு, மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி...
தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும், மறைமுகமான யுத்தம் ஒன்றை, ஒடுக்குமுறை ஒன்றை நாம் எதிர்கொள்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாழ் நாள் சாதனையாளர் விருதுபெற்ற ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் எதனையும் தர அரசாங்கம் தயாராக இருக்கவில்லை....
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா கும்பல் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களும் களையப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை ஆவா குழுவுடன் இராணுவத்திற்கு தொடர்பிருப்பதாக அனைத்துத் தரப்பினரும் சந்தேகம் வெளியிட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர், இது தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்....
யாழ்ப்பாணத்தில் தீவிரமடைந்துள்ள வாள்வெட்டு உட்பட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற பெயரில் தமது கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவரையும் ரி.ஐ.டி என அழைக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசார் கைதுசெய்திருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, சில்லாலை...
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ரீ.ஐ.டி என அழைக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரே இந்தக் கைதுகளை மேற்கொண்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் பொறியியல் பிரிவில் கடமையாற்றும் தமிழ் சிப்பாய் ஒருவரும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார். சாவகச்சேரி, தமிழரசுக் கட்சி அலுவலகத் திறப்பு விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'சாவகச்சேரி மறுவன்புலவு...
கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை இன்றுத் திங்கட்கிழமை (07) காலை மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்த பொலிஸார், இந்த கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தனது கணவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி, கிளிநொச்சிக்கு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் முறைப்பாடு செய்துள்ளார். முன்னாள் போராளியான 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நடராசா சபேஸ்வரன் என்பவர், கடந்த 23ஆம்திகதி விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்...
நல்லாட்சியிலும் தமது நியமனத்தினை வழங்காது புறக்கணிப்பதாக, யாழ் மாநகர சபையின் சுகாதார சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் இன்று யாழ் மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர். தமது நியமனத்தினை வழங்காது பாரபட்சம் காட்டுவதாகவும், அதற்கு உரிய தீர்வினை அரச அதிகாரிகள் வழங்குவதில் அசமந்த போக்கில் உள்ளதாகவும் சுகாதார சிற்றூழியர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச பணியாளர்கள் மத்தியில் நெகிழ்வுத்தன்மையான வேலை நேரக்கொள்கை அமுல்செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக கொழும்பில் இந்த நெகிழ்வு தன்மையான வேலை நேர கொள்கை, அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஆங்கில செய்தி தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேல்மாகாண பாரிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவை கோடிட்டு இந்த செய்தியை வெளியாகியுள்ளது. இதன்படி அடுத்த மாதம் முதல்,...
யாழ்.நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்ற வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண்களைக் குறித்த நிறுவனப் பணியாளர்கள் முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை தடுத்து வைத்திருந்த சம்பவம் பொன்னாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இவற்றை விட ஒரு படிமேல் சென்று கடனைச் செலுத்த முடியாவிட்டால் தற்கொலை செய்யுங்கள் அப்படிச் செய்தால் கடனில்...
Loading posts...
All posts loaded
No more posts
