தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் மற்றும் ஈரோஸ் ஆகிய ஆயுதக் குழுக்களுக்கு, இந்திய இராணுவம் ஆயுதங்களை வழங்கியதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அவ்வேளையில், நாங்கள் நாட்டில் இருக்கவில்லை. இந்தியாவில் இருந்தோம் என்றார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.