அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் : டி.எம். சுவாமிநாதன்

கருணா , பத்மநாதன் போன்றோர் சுதந்திரமாக நடமாடும்போது சிறு குற்றம் புரிந்த அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் என்று நாம் சிபார்சு செய்துள்ளோம் என்று மீள்குடியமர்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். இது குறித்து மீள்குடியமர்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்....

ஆவா குழுவுடன் புலிகளுக்கும் தொடர்பில்லை இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை-பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ஆவா குழுவானது விடுதலைப் புலிகளிடமிருந்தோ, இராணுவத்திலிருந்தோ அல்லது அரசியல் கட்சியிலிருந்தோ தோற்றம் பெற்ற ஒன்றல்ல எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடக்கிலுள்ள அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தி கப்பம் பெறும் ஒரு குழுவே ஆவா குழுவென குறிப்பிட்டுள்ளார். பியகம பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச்சேர்ந்த 6பேர் கைது என காவல்துறையினர் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 6பேரைக் கைதுசெய்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொக்குவில், சில்லாலை, சுன்னாகம் போன்ற பிரதேசங்களில் நேற்று முன்தினம் நான்குபேரும், உடுவிலில் இரண்டுபேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் எனவும், அவர்களை வீட்டில் வைத்துக் கைதுசெய்ததுடன், அவர்களுக்குச் சொந்தமான கயஸ் வாகமொன்றையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து சென்ற விசேட குற்றப் புலனாய்வுப்...

பெருமளவு பொலிஸார் போதைப்பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகள்-சந்திரிகா

பொலிஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரும் சில அரசியல்வாதிகளும் இலங்கையில் நடக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகளாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தும் முன்னர், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹாவில்நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போதே...

பெப்ரவரி முதல் ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம்

கடமையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும், கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக குறித்த ஓய்வூதியத்தை வழங்கவுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெரும் கால...

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு-சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று அக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புதுடெல்லி சென்றிருந்த அவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பை...

இவ்வருட முடிவுக்குள் கல்வி நிருவாக சேவைக்கு 852 பேர் நியமனம்- கல்வி அமைச்சு

இவ்வருடம் முடிவதற்கு முன்னர் கல்வி நிருவாக சேவைக்கு தகுதியான 852 பேரை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளிலிருந்து 219 பேரும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 515 பேரும், சிரேஷ்ட மற்றும் தகுதி அடிப்படையில் 118 பேரும் இவ்வாறு தெரிவு செய்யப்படவுள்ளனர். திறந்த போட்டிப் பரீட்சையில்...

இராணுவமே எமது வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது : வள்ளுவர்புர மக்கள்

வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து தாம் இடம்பெயர்ந்த போது தங்களுடைய வீடுகள் நிலம் எவ்வாறு காணப்பட்டதோ அதே போன்று மீண்டும் வழங்கப்படவேண்டும் என வலிகாமம் வடக்கு தையிட்டி- வள்ளுவர் புரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது காணிகளை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் மீண்டும் மக்களிடம் எவ்வாறான நிலையில் கையளிக்கின்றார்கள் என்பதை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் காணி உரிமையாளர்களுடன் நேரடியாக...

மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த ஒரு தீர்வையும் ஏற்க போவதில்லை ; சம்பந்தன்

மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு தீர்வையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேம் எமக்கு தேவையான சட்ட ரீதியான உள்ளடக்கங்கள் ஒரு தீர்வில் காணப்பட்டால் அதனை தமிழர்கள் இழக்க கூ்டாது எனவும் குறிப்பிட்டார். காலைக்கதிர் நாளிதழின் பிரசுரமும் ஆரம்ப விழாவும் நேற்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில்...

பூட்டிய அறையிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

பூட்டிய அறையிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை, இளவாலை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (05) மீட்டுள்ளனர். பண்டத்தரிப்பு கீரிமலை வீதி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலம், அதேயிடத்தை சேர்ந்த செல்வநாதன் திசாளினி (வயது 21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், இது தொடர்புடைய...

தொண்டமானறு கடலில் முழ்கி சிறுவன் உயிரிழப்பு

தொண்டமானாறு கடலில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். ஆனந்தகுமார் ஜெயபிரகாஸ் வயது (14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கந்தசஷ்டியின் இறுதி நாளான நேற்று சனிக்கிழமை (05), சூரன் போர பார்ப்பதற்கு, மேற்படி சிறுவன் உறவினர் ஒருவருடன் செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் உறவினருக்கு தெரியாமல் சிறுவன் அருகில் உள்ள...

கஜன், சுலக்ஸன் வீட்டுக்குச் சென்றார் சம்பந்தன்

கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்களின் வீடுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்தார்.

ஆவா குழு என்ற சந்தேகத்தில் யாழில் இருவர் கைது

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் போரில் உடுவில் பகுதியில் சகோதரர்கள் இருவரை பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினர் கைதுசெய்ததினால் அப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவினர் வீட்டில் இருந்த சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்த வேளையில், வீட்டில்...

யாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம்

மறைந்து வரும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் ‘ஆயுசு 100′ விற்பனை நிலையத்தின் செயற்பாடு உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலாம் குறுக்குத்தெரு, வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் பணிப்பாளர் கே.றுசாங்கன், கடந்த...

கிளிநொச்சியில் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள் பணம் கொள்ளை

கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு (04-11-2016) வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. வெள்ளி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது ஆலய மண்டபத்தின் மேல் உள்ள துவாரத்தின் ஊடாக திருடா்கள் உள்நுழைந்து திருடியிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. இச்சம்பவத்தின் போது ஜந்து பவுன் தங்க நகைகளான...

கல்விப் பொதுத்தராதர உ/த மாணவர்களுக்கு tab!

கல்விப் பொதுத்தராதர உயர்த்தர பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் டெப் (Tab) வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் டெப்களை கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார். ஹொங்கொங்கில் இடம்பெற்ற, ஜேர்மன் வர்த்தகம் தொர்புடைய ஆசிய பசுபிக் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை ஒரு...

மரநடுகை மாதத்தை முன்னிட்டு சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்று ஆரம்பமாகியது

வடமாகாணசபையால் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்று சனிக்கிழமை (05.11.2016) ஆரம்பமாகியுள்ளது. மரநடுகை மாதத்தை முன்னிட்டு பொதுமக்களும் சமூக அமைப்புகளும் மரநடுகையில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இவர்கள் தங்களுக்குத் தேவையான தரமான மரக்கன்றுகளைப் பெறும் நோக்கிலும் உள்ளூர் தாவர உற்பத்தியாளர்களுக்கான சந்தை...

வடமாகாண மரநடுகை மாதம் மரநடுகையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி வருகிறது

வடமாகாண விவசாய அமைச்சால் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் மரநடுகை மாதம் கொண்டாடப்பட்ட நிலையில், இப்போது மூன்றாவது தடவையாக மரநடுகை மாதம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இது தொடர்பாகப் பொதுமக்கள் சிலரின் அபிப்பிராயங்கள் 30.10.2016 அன்று தினக்குரலில் வெளியாகியுள்ளது. அது இங்கே வலையேற்றப்பட்டுள்ளது. வீட்டுக்கு ஒரு வீரரை...

சுகாதார நலன்பேணாத வர்த்தகர்களுக்கு அபராதம் விதிப்பு

அச்சுவேலி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவு உற்பத்தியில் ஈடுபட்டமை மற்றும் சுகாதார நலன்பேணாத உணவக, வெதுப்பக மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் தீரப்பளித்தார். அச்சுவேலி இராச வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பழுதடைந்த உணவுகளை விற்பனை செய்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தமை,...

யாழ் போதனா வைத்தியசாலையில் DEXA SCAN பரிசோதனை ஆரம்பம்

எலும்பு தேய்வடையும் நோயானது (ஒஸ்ரியோபொரோசிஸ் – DEXA SCAN) வயது முதிர்ந்தவர்களில் குறிப்பாக மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும். இது ஏற்படுவதற்கு பல்வேறுபட்ட ஹோர்மோன் குறைபாடுகள், நீண்ட கால சத்துக் குறைபாடுகள், பலவிதமான உடல் நோய்கள் மற்றும் சில வகையான மருந்துவகைகளை நீண்டகாலமாக உள்ளெடுத்தல் என்பன காரணமாக அமையலாம். இவ்வாறு எலும்பு...
Loading posts...

All posts loaded

No more posts