ராஜித பொறுப்புடன் பேச வேண்டும்- ரெஜினோல்ட் குரே

அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன பொறுப்புடன் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடக்கில் செயற்படும் ஆவா குழு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய...

கிளிநொச்சியில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் விளக்கமறியலில்

கிளிநொச்சியில் பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் மோதல் ஏற்படக் காரணமாக செயற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் கட்டைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நவநீதராசா என்பவருக்கே எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப்...
Ad Widget

முல்லைத்தீவில் அராஜகத்தில் ஈடுபடுபவர்களை தடுக்காதது ஏன்? மீனவர்கள் கேள்வி

முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழ் மீனவர்களை தாக்கிய புல்மோட்டை முஸ்லிம் மீனவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தபோதும் இதுவரை சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களை பிடிப்பதற்காக கடற்தொழில் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார், தமிழ் மீனவர்களை உதவிக்கு அழைத்து சென்றிருந்த நிலையில் கடந்த மாதம் 17 ஆம் திகதி இந்தத்...

வடக்கிலிருந்து இராணுவம் அகற்றுவதென்ற பேச்சிற்கே இடமில்லை: ஆளுனர்

வடக்கில் இராணுவத்தை அகற்றிக்கொள்வதென்ற பேச்சிற்கே இடமில்லையென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். நாட்டின்தேசியப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டிருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ள வட மாகாண ஆளுநர், வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் தெற்கிலுள்ள இராணுவ முகாம்களும் அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த வட...

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்ட மக்கள்!

வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான 460 ஏக்கர் காணிகளை இன்று வெள்ளிக்கிழமை பொது மக்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த பாதுகாப்பு வலய எல்லையில் மக்கள் அழைக்கப்பட்ட நிலையில் அங்கு இராணுவத்திரால்...

பண்டித் அமரதேவவின் உடலை தாங்கி வந்தார் ஜனாதிபதி!

சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடல் தாங்கிய பேழையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தாங்கி வந்துள்ளார். இது இலங்கையின் வரலாற்றிலேயே நாட்டின் ஆட்சியாளரால் கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு...

‘சுலக்ஸன் சுடப்பட்டார், கஜன் விபத்தில் உயிரிழந்தார்’

கொக்குவில், குளப்பிட்டியில் உயிரிழந்த மாணவர்களில் விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24), துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த மற்றைய மாணவரான கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன், மரண விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த...

யாழ்.பல்கலை மாணவர் படுகொலை ; ஐந்து பொலிஸார் மீண்டும் விளக்கமறியலில்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர்கள்...

சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸ் காவலரண் அமைக்கவும்

ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பிணை கருத்தில் கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் காவலரண் ஒன்றினை அமைக்க சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஆலாசனை வழங்கினார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த மூவர் காவல்கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளியினை தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு வியாழக்கிழமை (03)...

மருந்துகளின் விலை குறைக்கப்படவில்லையா? உடன் அழையுங்கள்!

மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாத மருந்தகங்கள் குறித்து முறைப்பாடு செய்ய இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இவ்வாறு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் 011 30 71 073 மற்றும் 011 30 92 269 என்ற இலக்கங்களுக்கு அழைத்து பொது மக்கள் தெரிவிக்க முடியும்.

வெள்ளை வான் கடத்தலில் ‘சனல்-4க்கு தொடர்பு’

வெள்ளை வான் கடத்தலானது, சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினதும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும் கட்டுக்கதை என, ஒன்றிணைந்த எதிரணியின் நடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினரின் ஏற்பாட்டில், கொழும்பில், நேற்று வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அவர், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி காரணமாக ஏற்பட்ட...

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் கொலை: பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த 20ஆம் திகதி...

தேசிய துக்கவாரம்! அரசாங்கம் அறிவிப்பு

பண்டித் அமரதேவவின் மரணத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று (03) முதல் எதிர்வரும் ஒரு வார காலத்தை துக்க வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்படி, அரச காரியாலயங்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நேற்று அறிவித்தல் விடுத்துள்ளது. இதேவேளை மரணமடைந்துள்ள பண்டித் அமரதேவவின் வைத்திய சிகிச்சைக்கான சகல மருத்துவ செலவுகளையும்...

இராணுவம் பொலிஸாருக்கு எதிராக செயற்பட்டு வடக்கில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி!

வடக்கில் பெருமளவு படையினர் நிலைக்கொண்டு இருக்கும்வரை அங்கு ஜனநாயக சூழல் ஏற்பட வாய்ப்பில்லாததுடன், மக்கள் நிம்மதியாகவும் வாழ முடியாது. எனவே வடக்கில் ஜனநாயக சூழலை ஏற்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தலைத்தூக்கியுள்ள சமூக விரோத குழுக்கள் தொடர்பில்...

யாழில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலை தொடர்பில் ஆராய அரசியல் கட்சிகளுக்கு ரெலோ அழைப்பு!!

யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டம் ஒன்றை கூட்டுமாறு ரெலோ கட்சி ஏழு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளருமான என்.சிறீகாந்தா...

சட்டவிரோத மரக்கடத்தலுக்கு உடந்தையான காவல்துறையினர் பணிநீக்கம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோத மரக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்தின் உதவி காவல்துறை அத்தியட்சகர் றொசான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – அக்கராயன் காட்டுப் பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பதினாறு முதிரை மரக்குற்றிகளை கிளிநொச்சி நகருக்குக் கொண்டு செல்வதற்கு...

யாழ்ப்பாண மாநகரசபையில் நிதி மோசடி!

யாழ்ப்பாண மாநகர சபையில் திட்டமிடல் கிளையில் பணிபுரியும் பெண்ணொருவர் 17 இலட்சம் நிதிமோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாணக் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாநகர சபையின் திட்டமிடல் கிளையின்கீழ் புதிய கட்டிட அனுமதி மற்றும் பல்வேறு அனுமதிகளிற்காக வழங்கப்படும் படிவங்கள் மற்றும் அறவீடுகளின்போதே குறித்த பண மோசடி இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடி இடம்பெற்றமை தொடர்பாக கண்டறியப்பட்டதன்பின்னரே நிர்வாக ரீதியில்...

முன்னாள் போராளி ஒருவர் மரணம்!

வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பகுதியை சேர்ந்த அமலதாஸ் (வயது46) எனும் நபரே இவ்வாறு மரணித்தவர் என்று கூறப்படுகின்றது நேற்றைய தினம் உறவினர்களுடன் வெளியில் சென்று விட்டு மதியம் மூன்று மணியளவில் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்பதற்காக படுக்கைக்காக சென்ற வேளை...

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்கிறது

இலங்கையில் குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவர்களுக்கு தண்டனை வழங்கும் வயது 12 ஆக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், தற்போது நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்டத்திலுள்ள தண்டனை கோவையில், சில திருத்தங்களை செய்ய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் முன் வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டக் கோவையில் குற்றச்...

ஆவாகுழு-கோத்தா தொடர்பு விரைவில் அம்பலமாகும்-மீளவும் உறுதிப்படுத்திய அமைச்சர் ராஜித

ஆவா குழு ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஸ கூறினாலும், அவரது ஆசீர்வாதத்துடனேயே அந்தக் குழு ஆரம்பிக்கப்பட்டது என்பதை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன மீளவும் தெரிவித்துள்ளார் ஆவா குழுவிற்கும் – கோட்டாபயவிற்கும் இருக்கும் தொடர்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜித்த...
Loading posts...

All posts loaded

No more posts