Ad Widget

பண்டித் அமரதேவவின் உடலை தாங்கி வந்தார் ஜனாதிபதி!

சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது.

maith-body

அவரது உடல் தாங்கிய பேழையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தாங்கி வந்துள்ளார். இது இலங்கையின் வரலாற்றிலேயே நாட்டின் ஆட்சியாளரால் கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு தாங்கி வரப்பட்டமை வரலாற்றில் முதல்தடவையாகும்.

இந்த ஊர்வலத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். அத்துடன் அன்னாருக்கு மரியாதை செலுத்தும் முகமாக தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும், அனைத்து வீடுகளிலும் வெள்ளைக்கொடியை தொங்கவிடுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற கலைஞர் டபிள்யூ.டி.பண்டித் அமரதேவவின் இறுதிக்கிரியைகள் நாளை (சனிக்கிழமை) மாலை 6.00மணியளவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts