முல்லைத்தீவில் அராஜகத்தில் ஈடுபடுபவர்களை தடுக்காதது ஏன்? மீனவர்கள் கேள்வி

முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழ் மீனவர்களை தாக்கிய புல்மோட்டை முஸ்லிம் மீனவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தபோதும் இதுவரை சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களை பிடிப்பதற்காக கடற்தொழில் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார், தமிழ் மீனவர்களை உதவிக்கு அழைத்து சென்றிருந்த நிலையில் கடந்த மாதம் 17 ஆம் திகதி இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்து.

தற்போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடும் முல்லைத்தீவு மக்கள் தமது வளங்கள் அழிக்கப்பட்டு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்வதாகவும் தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெறுமாயின் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்சிலை ஏற்படும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டால் மாத்திரமே சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த முடியும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Posts