- Saturday
- August 15th, 2026
தனக்கு போதை தலைக்கேறியதால், கணவனொருவன் தன்னுடைய மனைவியை, மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய மிகவும் அறுவறுக்கக் கூடிய சம்பவமொன்று வடக்கில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட, முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த அப்பெண், யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் உயிருக்கு எவ்விதமான ஆபத்துகளும் இல்லையென தெரிவித்த, அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், அப்பெண்ணுக்கு மேலதிக சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில்...
ஆவா குழுவை காரணம் காட்டி, குமாரபுரம் படுகொலை வழக்கைப் போன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கையும் வட மாகாணத்திற்கு வெளியே அநுராதபுரம் போன்ற பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கான முயற்சி இடம்பெறுகின்றதா என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் இராணுவ தளபதி ஒருவருமே ஆவா குழுவை உருவாக்கி வழிநடத்தியதாக...
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பு ஊடாக கடத்தபட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனைக் கடத்தி வந்த சந்தேகநபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ஏ.ஆர் மாசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து மாதகல் கடற்பரப்பு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக இளவாளை பொலிஸாருக்கு இரகசிய தகவலைன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து காங்கேசன்துறை விஷேட பொலிஸ் குழு...
வவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் இரண்டரை வயதுடைய ஆண்குழந்தையுடன் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை அயல் ஊராகிய ஒமந்தை பன்றிக்கெய்தகுளம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நுண்கருத் திட்டம் என்றழைக்கப்படுகின்ற நுண்கடன் திட்டத்தின் கீழ் நிதி நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்ற...
பாவனையாளர்கள் நலன் பேணாத, புத்தூர் பகுதியிலுள்ள விவசாய வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரம் வசந்தசேகரம் தெரிவித்தார். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து, குறித்த நிலையம்,சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, காலாவதியான விவசாய...
ஆபத்தான முறையிலும் கவனக்குறைவாகவும் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தி, கிராம சேவகருக்கு காயத்தை ஏற்படுத்தினார் என்று குற்றச்சாட்டுக்கு இலக்கான இராணுவ வீரருக்கு 9ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்த மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், விபத்தில் பாதிக்கப்பட்ட கிராம சேவகருக்கு 1 இலட்சம் ரூபாயை, நட்டஈடாகச் செலுத்துமாறும் உத்தரவிட்டார். கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதியன்று,...
புங்குடுதீவு மாணவியான வித்யாவின் படுகொலைக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரை, விடுவிக்குமாறு ஆலோசனை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை கைதுசெய்வதற்கான ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சியில் பழமைவாய்ந்த மரம் முழுமையாக சரிந்து விழுந்ததில் பலமணிநேரம் ஏ9 வீதி போக்குவரத்து தாமதமடைந்தது.கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் நுறு வருடம் பழமைவாய்ந்த மரம் நேற்றிரவு முழுமையாக ஏ9 வீதியில் சரிந்து விழுந்ததில் பலமணிநேரம் போக்குவரத்து தாமதமடைந்தது. கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி கோவில் அருகிலுள்ள இத்தி மரம் ஏ9 வீதியின் குறுக்கே மழைகாரணமாக சரிந்து விழுந்ததில்...
விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினிக்காக சிங்கள பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இப்பாடல் தமிழிலும் பாடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழினி தனது உணர்வுகளை சொல்வது போன்ற வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு லைட் ஹவுஸ் கெலேயில் இடம்பெற்றுள்ளது. காஷ்யப்ப சத்யபீரிஸ் டி சில்வாவின் பாடல்...
வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான 460 ஏக்கர் காணிகளை நாளை வெள்ளிக்கிழமை பொது மக்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீரிமலை வீட்டுத்திட்டத்திதை பயனாளிகளிடம் கையளித்த அதேவேளை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு...
ஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். ஆவா குழுவில் ஐநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் எனவும், இவர்களில் அதிகளவானவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுவின் உறுப்பினர்கள் தொலைபேசி ஊடாக...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிங்டன் வெற்றிபெற வேண்டுமென நல்லூர் ஆயல சூழலில் நேற்று 1000 தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது. ரெலோ அமைப்பின் சிவாஜிலிங்கம், சதீஷ் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு நடந்தது. இதேவேளை, ஹிலாரிக்கான தமிழர் அமைப்பு என்ற பதாகையும் அங்கு கட்டப்பட்டிருந்தது.
புலிகளை அழித்த எமக்கு ஆவா ஒன்றும் பெரிய விடயம் அல்ல என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எல்லோருக்கும் தெரியும் ஆவா என்பது கடத்தல் வேலை செய்யும் ஒரு குழு....
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவுடன் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லையென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடித்துக் கூறியுள்ளார். அதேபோல் இராணுவமும் முன்னாள் போராளிகளை வைத்து, ஆவா கும்பலைப் போன்ற ஒரு கும்பலை இயக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற...
யாழ்ப்பாணத்தில் மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துவரும் ஆவா குழுவை தாம் உருவாக்கவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, அந்தக் குழுவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தனக்கு எதிராக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த கோட்டாபய ராஜபக்ச, ஒட்டுமொத்த படையினரையும் அமைச்சர் கேவலப்படுத்தியிருப்பதாகவும்...
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் மாணிக்கமடு கிராமத்தின் அருகே உள்ள மாயக்கல்லி மலைமீது அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பிக்குகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை திடீரென அப்பகுதிக்கு வந்த புத்த பிக்குகளால் தமிழ்க்கிராமமான மாணிக்கமடுவை அடுத்த மாயக்கல்லி மலை மீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. அந்தப் பகுதியில் பௌத்தர்கள்...
கூட்டுறவுப் பெரியார் வீரசிங்கம் நினைவாக யாழ்ப்பாணத்தில் அவரது முழு உருவச்சிலை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையில் கூட்டுறவுச்சபை அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கும் கூட்டுறவுசார் நிலையில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் தன்னால் இயன்ற வரை உழைத்து மக்களின் மனதில் தனியிடம் பெற்றவர் கூட்டுறவுப் பெரியர் வீரசிங்கம் ஆவார். வடபகுதியில் கூட்டுறவு வளர்ச்சிக்கு அவர்...
யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் என்னும் கருப்பொருளில் முஸ்லிம் கலாசார நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத்தினரோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த கலாசார நிகழ்வின் பிரதம...
கிளிநொச்சி பொது வர்த்தக சந்தைக் கட்டடத் தொகுதியில் தீயினால் பாதிப்புக்குள்ளான கடைத்தொகுதிகள் மீள நிர்மாணிக்கப்படவுள்ளன. தீயினால் பாதிப்புக்கு உள்ளான கடைத்தொகுதியினை மீள நிர்மாணித்து 150 மில்லியன் ரூபா செலவில் நிலையான பொது சந்தை கட்டட தொகுதியொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார...
வடக்கில் இயங்கும் "ஆவா" எனப்படும் குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த குழுவினர் இன்று வரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு அமையவே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் குறித்த குழுவை கட்டியெழுப்பிய பிரிகேடியரை தனக்குத் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க...
Loading posts...
All posts loaded
No more posts
