Ad Widget

கிராமசேவகருக்கு நட்டஈடு வழங்கிய இராணுவ வீரர்

ஆபத்தான முறையிலும் கவனக்குறைவாகவும் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தி, கிராம சேவகருக்கு காயத்தை ஏற்படுத்தினார் என்று குற்றச்சாட்டுக்கு இலக்கான இராணுவ வீரருக்கு 9ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்த மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், விபத்தில் பாதிக்கப்பட்ட கிராம சேவகருக்கு 1 இலட்சம் ரூபாயை, நட்டஈடாகச் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதியன்று, காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ கெப் ரக வாகனம், அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த கிராம சேவகரை மோதிவிட்டுச் சென்றது.

இதில், சாவகச்சேரி – நுணாவில் பகுதியைச் சேர்ந்த ஜயாத்தம்பி காணமூர்த்தி (வயது 40) என்ற கிராம சேவகர் காயங்களுக்குள்ளாகினார்.

இதனையடுத்து, இந்த விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த காங்கேசன்துறை 5ஆவது பொறியியல் படைபிரிவினைச் சேர்ந்த இராணுவ வீரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்வழக்கின் தீர்ப்பு, நேற்றுப் புதன்கிழமை (02) வழங்கப்பட்டது.

Related Posts