Ad Widget

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாளை மக்கள் செல்ல அனுமதி!

வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான 460 ஏக்கர் காணிகளை நாளை வெள்ளிக்கிழமை பொது மக்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளது.

vetha-kks-tellippalai-land-release

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீரிமலை வீட்டுத்திட்டத்திதை பயனாளிகளிடம் கையளித்த அதேவேளை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த 460 ஏக்கர் காணிகளை விடுவித்தார். ஜனாதிபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து காணி உரிமையாளர்கள் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாளை காலை நேரடியாக சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதில் தையிட்டி தெற்கு, தையிட்டி கிழக்கு, தையிட்டி வடக்கு, ஆகிய பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படுவதுடன் காங்கேசன்துறை தெற்கின் ஒரு பகுதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இப் பகுதிகளில் சுமார் 500 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் மீளக்குடியேறக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தொடந்து பதிவுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீளக்குடியேறும் மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கும் மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை விடுவிக்கப்படும் பிரதேசங்களில் சில படைமுகாம்கள் இருக்கும் எனவும் அவையும் படிப்படியாக அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts