- Saturday
- August 15th, 2026
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் மருதம் என்ற பெயரில் மருதநிலத் தாவரங்களின் மாதிரிப் பூங்காவொன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள் இயற்கைச் சூழலை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகைத் திணைகளாக வகைப்படுத்தியுள்ளது. இத்திணைகளில் ஒன்றான வயலும் வயல் சார்ந்த சூழலுமாகிய மருதநிலத்துக்கான தாவரங்களுக்குரிய மாதிரிப் பூங்காவொன்றே இரணைமடு இடதுகரை...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவந்த அனைத்து விசாரணைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.முடிவுற்ற விசாரணை அறிக்கைகள் அனைத்தும் சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் மே மாதம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த வித்தியா என்னும் மாணவி...
முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள பெண்களை இராணுவம் தொடர்ச்சியாாக அச்சுறுத்தி வருவதாக கேப்பாப்புலவு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் நேற்று மாலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேப்பாப்புலவுக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடிய போதே...
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவினால் புதிய கட்சி, புதிய சின்னம் மற்றும் அதன் தலைவர் ஆகியன தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அபே சிறீலங்கா நிதஹஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) என முதலில் வைக்கப்பட்ட பெயர் தற்போது சிறீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய...
யாழ் பல்கலைக்கழகத்தின் இரு கலைத்துறை மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து பீடங்களின் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே.றஜீவன் தெரிவித்தார். எவ்வாறாயினும் ஒரு மாத காலத்தில் நீதி கிடைக்காவிட்டால் மீண்டும் ஏதாவது ஒரு வழியில் பேராட்டத்தை ஆரம்பிப்பதாக அவர் கூறினார். கடந்த மாதம்...
துன்னாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் மற்றும் வாள்வெட்டில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீளவும் வெட்டுவதற்கு வாள்களுடன் வைத்தியசாலையில் புகுந்தவர்களால் பெரும் பதற்றம் நிலவியிருந்தது. துன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்காகி அண்ணன், தம்பி உட்பட மூவர் படுகாயமடைந்தனர். இதில் அதேயிடத்தினைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கமலேஸ்வரன் (வயது33),...
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இறந்துபோன தனது சகோதரனை நினைத்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.காலி காராப்பிட்டி வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை ஸ்தாபிக்கும் நோக்குடன் (TRAIL WALK ) நடைபவனி இடம்பெற்று வந்தது. இதன் நிறைவு நாளான நேற்று காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் குறித்த புற்றுநோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல்...
கிளிநொச்சி நகரத்தில் 2016 செப்டெம்பர் 16ஆம் திகதியன்று ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தாக்கல் செய்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில் 74 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் 122...
தமிழகம்- பாம்பன் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மன்னார்வளைகுடா சின்னப்பாலம் கடல் பகுதியில் நேற்று திடீரென சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியது. இதனால் கரையில் நிறுத்தபட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தது. கடந்த சில நாட்களாக மன்னார்வளைகுடா கடல்பிராந்தியத்தில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துவந்தது...
நவாலி வீதி, ஆனைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றில் நித்திரையில் இருந்த குடும்பஸ்தர், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஏழு பிள்ளைகளின் தந்தையான தேவகுமார் தேவதாஸ் (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். திங்கட்கிழமை (31) இரவு, நித்திரைக்கு சென்ற அவரை அதிகாலை, மனைவி எழுப்பிய போது எந்தவித அசைவும் இன்றி...
ஆவா குழு, சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்கள். அவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர்கள் பற்றிய சகல விவரங்களும் இராணுவத்தினரிடம் உண்டு என்பதே உண்மையாகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள், இன்று புதன்கிழமை (02) முதல் ஆரம்பமாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம், 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார்...
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி நடத்தும் காலப் பகுதியிலும் இலங்கையில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் 208 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிற்கு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள 17 பக்க அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது....
யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அவசியமான செயற்பாடுகள், துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தனர். இதன்போது குறித்த குழுவின் தலைவர் ஜீன் லம்பேட் மேற்குறித்தவாறு தெரிவித்தார்....
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்ரேட்டை முன்னுதாரணமாகக் கொண்டு, யாழ் குடாநாட்டில் இயங்கிவரும் ஆவா குழுவை அழித்தொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது பல சேனா என்ற சிங்கள பேரினவாத இயக்கம், இராணுவப் புலனாய்வாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை ஆவா குழுவினர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னால் உறுப்பினர்கள் என்று புதிய கதையை கட்டவிழ்த்து...
நாட்டில் சகல காவல்துறை நிலையங்களிலும் தமிழ் மொழியில் விசாரணை செய்வதற்கும் தமிழ் மொழியில் முறைப்பாட்டினைப் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை காவல்துறைத் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நினைவுதின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று...
நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் வடக்கில் நிலைகொண்டுள்ள ஒன்றரை இலட்சம் இராணுவத்தினரும் வெளியேற்றப்படவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவிடம் எடுத்துரைத்துள்ளர். சிறீலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி வரிச்சலுகை வழங்குவது தொடர்பாக ஆராய கொழும்பு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண முதலமைச்சரை கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை...
யாழ் மாவட்டக் கரையோர பகுதிகளில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் முன் அனுமதியின்றி எந்த வகையான அபிவிருத்தி செயற்பாடுகளும் மேற்கொள்ளக்கூடாது. இதுதொடர்பான அறிவிப்பை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் தற்போது அதிகளவான கட்டுமான நடவடிக்கைகள் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும்...
வங்காள விரிகுடாவின் கிழக்கே தாழமுக்க நிவை ஏற்பட்டுவருவதினால் நாடு முழுவதும் கடும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழமுக்கம் காரணமாக இவ்வாரம் நாடு முழவதும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் குறித்த பொலிஸாரின் விசாரணை தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ இது தொடர்பாக தெரிவிக்கையில் இதுபற்றி ஆராய்வதற்கென ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். அவரது அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் . செயலாளர்...
Loading posts...
All posts loaded
No more posts
