Ad Widget

அந்தமான் தீவு அருகே காற்றழுத்தம் : மழைக்காலநிலை நீடிக்கும்

வங்காள விரிகுடாவின் கிழக்கே தாழமுக்க நிவை ஏற்பட்டுவருவதினால் நாடு முழுவதும் கடும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழமுக்கம் காரணமாக இவ்வாரம் நாடு முழவதும் கடும் மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நவம்பர் மாத காலப்பகுதியில் பெய்யும் மழையின் அளவு 100 மில்லிமீற்றரிலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவின் கிழக்கே படிப்படியாக தாழமுக்கம் உருவாகி வருகிறது. தாழமுக்கம் ஓரிரு தினங்களில் இந்தியாவை நோக்கி நகரவிருப்பதாகவும் இதனால் இலங்கை முழுவதும் கடும் மழை பெய்யுமென்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Related Posts