Ad Widget

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரி யாழ். விரைவு

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் குறித்த பொலிஸாரின் விசாரணை தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ இது தொடர்பாக தெரிவிக்கையில் இதுபற்றி ஆராய்வதற்கென ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

அவரது அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் . செயலாளர் கூறினார்.

இதகுறித்து ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ மேலும் தெரிவிக்கையில் இந்த சம்பவம் பற்றி பொலிஸாரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் சிறப்பான முறையில் விசாரணைகளை நடத்துகின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்குக் கிடையாது விசாரணைகள் முறையான விதத்தில் இடம்பெறுகின்றனவா என்பது பற்றி உறுதிப்படுத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.

Related Posts