தமிழக மீனவர்கள் வடபகுதி கடலில் மீன்பிடிப்பதினால் வடபுல மீனவர்கள் பாதிப்பு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மீன்பிடிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய அரசாங்கத்துடனும், அந்நாட்டு மீனவ சங்க பிரதிநிதிகளுடனும் எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதற்காக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் குழுவினர் இந்தியாவுக்கு செல்ல உள்ளனர். நேற்று பிற்பகல் மீன்பிடி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை...

மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை : அமைச்சர் ஐங்கரநேசன்

மரங்களை நடுகை செய்வது சூழலியல் நோக்கில் ஓர் அறிவார்ந்த செயற்பாடு. அதேசமயம் தழிழ்ப் பண்பாட்டில் மரங்களை நடுகை செய்வது ஒரு உணர்வுபூர்வமான செயற்பாடாகவும் உள்ளது. அந்தவகையில், மண்ணுக்காக மரணித்த எமது உறவுகள் அத்தனைபேரையும் நாம் கூட்டாக நினைவு கொள்ளும் இந்தக் கார்த்திகை மாதத்தில் அவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை என்று...
Ad Widget

கொள்ளையிட முயன்ற இளைஞனை மடக்கி பிடித்த மக்கள்!

யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் வீடொன்றின் மேல் ஏறி நின்ற நிலையில் அயல் விட்டார் இதனை பார்த்து வீட்டாருக்கு கூறியுள்ளனர். இதனையடுத்து அயலில் உள்ளவர்களும் சேர்ந்து சந்தேகநபரை சுற்றிவளைத்துள்ளனர்....

காரைநகர் சாலைக்கு சொந்தமான இபோச பஸ் மீது தாக்குதல்!

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் - காரைநகர் சாலைக்கு சொந்தமான பஸ் மீது நேற்று (31) இரவு 08.30 அளவில், சங்கானைப் பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து சங்கானை - சித்தங்கேணி ஊடாக காரைநகர் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் மீது, சங்கானை - மதவடிப் பகுதியில் வைத்து,...

ஆவா குழு தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை!!

ஆவா குழு தொடர்பில் எவ்வித அச்சம் கொள்ளத் தேவையில்லை என வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். வன்னி கட்டளைத் தலைமையகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஆவா குழு தொடர்பில் வடக்கிற்கு வரும் சிங்களவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆவா குழு...

80 கிலோ கஞ்சாவுடன் 4 மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 இலங்கை மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை (31) மாலை கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்களிடமிருந்து 80 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டடுள்ளதாகவும் காரைநகர் மற்றும் வேலணை பகுதியைச் சேர்ந்வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு...

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை, இந்திய மீனவர்கள் நால்வரைக் கைதுசெய்துள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டிணம் பகுதியிலிருந்து விசைப் படகொன்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர்...

யாழில் கேரள கஞ்சா மீட்பு

ஊர்காவற்துறை பகுதியில் நேற்று மாலை 05.00 மணியளவில், குடியிருப்பாளர் அற்ற தனி வீடு ஒன்றில் இருந்து 73 கிலோ 900 கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, பொஸிசார் தெரிவித்துள்ளனர். இதன் பெறுமதி 10 இலட்சம் ரூபா என பொஸிசார் குறிப்பிட்டுள்ளனர். கிடைகப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கேளர கஞ்சா பொதிகளை...

இன்று முதல் அதிகரிக்கின்றது ‘வற்’ மற்றும் என்.பி.டி

வற் எனப்படும் பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி இதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.இதன்படி முன்பு 11 சதவீதமாக இருந்த வற் வரி, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வற் வரி பதிவுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனைகளுக்கான குறைமட்ட...

கிளிநொச்சியில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

கிளிநொச்சி பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து கடந்த 25 ஆம் திகதி வட மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை முன்பாக பொலிஸாருக்கும் பிரதேச இளைஞாகளுக்குமிடையே முறுகல்...

மீள் குடியேற்றம் தொடர்பான அதிகாரம் மாகாண சபைக்கு இல்லை: சுமந்திரனுக்கு சுரேஷ் பதில்!

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், அவர்களை மீள் குடியேற்றம் செய்தல் போன்ற விடயங்கள் மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட விடயமாக இருக்கின்றதே தவிர, அவற்றை மாகாண சபையினால் செயற்படுத்த முடியாது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் புரிந்துக்கொள்ள வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில், முஸ்லிம்களின்...

யாழ் பல்கலை மாணவர் கொலை வழக்கு அனுராரபுரத்திற்கு மாற்றப்பட வேண்டும்

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, உடனடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது. கடமையை செய்த காரணத்தால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படும் அதேவேளை அவர்கள் சார்பில் தமிழில் வாதக்...

ஆசிரியரையும் மாணவனையும் ஆவா குழு என கைது செய்த பொலிஸார்!!

யாழ்ப்பாணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ”ஆவா கெங்ஸ்டர்” உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனும், ஆசிரியரும் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் இரு வாள்களுடன் கைதுசெய்யப்பட்ட இருவரும் நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நவம்பர் 2 ஆம் திகதி...

யாழில் தொடரும் வாள் வெட்டு

பலாலி வீதி யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சிறு உணவகம் ஒன்றினுள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். திங்கட்கிழமை (31) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முகங்களிற்கு கறுப்புத் துணியால் கட்டியவாறு ஒரு மோட்டார் சைக்களில் வந்ததாகக் கூறப்படும் மூன்று நபர்களே குறித்த கடைக்குள் புகுந்து...

அழைப்புக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

15 சதவீத வற் வரி அதிகரிப்பு இன்று செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதற்கிணங்க ​​தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கின்றன. 80 பொருட்கள் மற்றும் சேவைகள் வற் அதிகரிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அழைப்புக்கட்டணம், தபால் கட்டணம் உள்ளிட்டவை உள்வாங்கப்பட்டுள்ளன. தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்களுக்கு அமுல்படுத்தப்படும் 15 சதவீத வற் வரி உள்ளடங்களாக...

ரவிராஜ் கொலை விவகாரம்: விசேட ஜுரி சபை விசாரிக்கும்

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின​ர் நடராஜா ரவிராஜ், கொலையுடன் தொடர்புடைய வழக்கு, விசேட ஜுரி சபையின் முன்னால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நவம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த வழக்கு விசேட ஜுரி சபையின் முன்னிலையில் விசாரிக்கப்படும் என கொழும்பு உயர்நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட ​ போது...

சிகரட் மீது வெறுப்பு ஏற்படுவதற்காகவே வரி அதிகரிப்பு

புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டை தடுப்பதில் இலங்கை பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மது, புகையில் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருள் பயன்பாடுகளில் இருந்து விடுபட்ட வாழ்கை ஒன்றை அனைத்து இலங்கையர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி, மஹவலி ரிஷ் ஹோட்டலில் இடம்பெற்ற மது,...

பிரபாகரன் படை உருவாவதற்கு தேசிய பாதுகாப்பு அக்கறையின்மையே காரணம் : மஹிந்த

யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் படை என்ற பெயரில் புதிய குழுக்கள் உருவாவதற்கு தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறையின்மையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நாட்டின் தேசியப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள மஹிந்த, இதனால் தென்பகுதியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு...

வீரகேசரி யாழ். அலுவலகம் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீரகேசரி பத்திரிகையின் அலுவலகம் மீது, இன்று திங்கட்கிழமை (31) காலை போத்தல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிர்வாகத்தால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராவின் பதிவின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்.பல்கலையில் அமைச்சர் சுவாமிநாதன்! மாணவர் நிர்வாகத்தை முடக்கினர்!

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இன்றைய தினம் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தி னருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் தற்போது யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்துள்ளார். இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவியலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்தனர்...
Loading posts...

All posts loaded

No more posts