பால்மாவின் விலை அதிகரிக்கும்?

பெறுமதி சேர் வரித் (வற்) திருத்தத்துக்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை, நூறு ரூபாயினால் அதிகரிக்கப்படக்கூடும் என்று, பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை காலமும், பால்மாவுக்கு “வற்” அறவிடப்படவில்லை. ஆனால், கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வற் திருத்தத்துக்கமைய, பால்மாவுக்கும் இந்த வரி விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று, மேற்படி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்....

‘ஆவா’ வுடன் தொடர்புடைய‘அக்லின்’ குழு தலைவர் கைது

ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் என்று கூறப்படும் இளைஞர் ஒருவரை, பத்தமேனிப் பிரதேசத்தில் வைத்து, சனிக்கிழமை (29) கைது செய்ததாக, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சமூக விரோதக் குழுவெனக் குறிப்பிடப்படும் ஆவா குழுவுடன், இவர் தொடர்பினை பேணி வந்துள்ளமை பொலிஸ் புலன் விசாரணையிலும், பேஸ்புக் தொடர்பு மூலமும் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்....
Ad Widget

தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் தமிழ் இணையத்தளம் முடக்கம்!

தமிழ் இணையத்தளம் ஒன்று, உண்மைக்கு புறம்பான பரப்புரைகளை மேற்கொண்டதுடன், நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்களை விமர்சனம் செய்யும் வகையில் செயல்படுவதாக தெரிவித்து அதன் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. ஊடகத்துறை அமைச்சின் முறைப்பாட்டை அடுத்து தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, இந்த தமிழ் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் சிரிசேன தெரிவித்துள்ளார்....

ஜனாதிபதி இன்று உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை சந்திப்பார்!

யாழ்ப்­பா­ணத்­திற்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வலி­வ­டக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்­கான வீடு­களை கைய­ளிக்­க­வுள்­ள­துடன் வலி­வ­டக்கில் மேல­தி­க­மாக 460ஏக்கர் காணி­க­ளையும் பொது­மக்­க­ளிடம் மீள வழங்கவுள்ளார். கடந்த 26வரு­டங்­க­ளுக்கு முன்னர் வலி­வ­டக்கு பகு­தியில் இருந்து குடா­நாட்டில் அப்­போது காணப்­பட்ட அசா­தா­ரண நில­மை­யினால் மக்கள் இடம்­பெ­யர்ந்து தற்­கா­லிக நலன்­புரி முகாம்­க­ளிலும் உற­வினர் வீடு­க­ளிலும் தங்­கி­யி­ருந்­தனர். இவ்­வா­றான...

கிளிநொச்சியில் பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைப் கிராமத்தில் தர்மபுரம்பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று விசேட பொலிஸ் நடமாடும் சேவை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாகவும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன அவர்களின் வழி நடத்தலின் கீழ் தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி சத்துரங்க...

கடந்த 10 மாதத்தில் 2800 பேர் வாகன விபத்தில் பலி

இவ்வருடத்தின் கடந்த 10 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2800 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களில் 16 பேர் காயம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் 16 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உருத்திரபுரம், கோணாவில், ஊற்றுப்புலம், மற்றும் விநாயகர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கும் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக...

பெற்றோரை பராமரிக்க மறுத்தால் சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்

பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் வயோதிபர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான சட்டத்திட்டங்களை தயாரிக்கப் போவதாக சமூக சேவைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அறிவித்துள்ளார். முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்படும் வயோதிபர்கள் இறந்தவுடன் அவர்களின் உறவினர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், உயிரிழந்த வயோதிபர்களின் சொத்துகளுக்காக முரண்பட்டுக்கொள்ளும் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளதாக...

‘முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் பாரபட்சம் காட்டப்படமாட்டாது’

“பொதுவாக வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலிருந்தும் குறிப்பாக, வன்னி மாவட்டத்திலிருந்து, யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு, வீடமைப்புத் திட்டங்களில் வீடுகளை வழங்கும் போது, அநீதியும் பாரபட்சமும் இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது” என புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார். இவ்விரு...

வாள்களுடன் இரண்டு பேர் யாழ்ப்பாணத்தில் கைது

சந்தேகத்திற்கிடமான முறையில் யாழ் நகரில் சுற்றித்திரிந்த இரண்டு பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பகுதியில் உள்ளக வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடகம் ஒன்றின் பயிற்சிக்காக குறித்த வாள்கள் இரண்டையும் வைத்திருந்ததாக சந்தேகநபர்கள்...

யாழ் பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளும் மாணவர்களால் முடக்கப்பட்டுள்ளது

யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் முன்னரே முடக்கப்பட்ட நிலையில் இன்று நிர்வாகச் செயற்பாடுகள் மாணவர்களால் முடக்கப்பட்டுள்ளது. மாணவர் கொலை தொடர்பில்  தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை நிர்வாகச்செயற்பாடுகள் மடக்கப்படும் என மாணவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பே!- சுமந்திரன்

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் இன்று கொழும்பில் முஸ்லீம் சமூகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட  நினைவுநாள் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் பங்கேற்றிருந்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட சுமந்திரன் அவர்கள் தனது உரையில் வடமாகாண முஸ்லீம்கள் மீள்குடியேற்றத்தில் வடமாகாண முதல்வர் தடை போட்டுவருவதாக குற்றம் சாட்டியுள்ளதோடு கூட்டமைப்பால் மேலதிக  ஆசனம் ஊடாக  வடமாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின்...

எமது போராட்டங்களுக்கு முஸ்லிம் தலைமைகள் ஒத்துழைப்பு தரவில்லை- சம்பந்தன்

எமது போராட்டங்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு தரவில்லை. அதை நாம் மறந்துவிடமுடியாது. ஐநாவில் தீர்மானம் இயற்றும்போது அவர்கள் அதற்கு எதிராக இராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வேலை செய்தார்கள் அதை நாம் மறந்துவிடமுடியாது. அதற்காக  முஸ்லிம் மக்களை உதாசீனம் செய்ய முடியாது. முஸ்லிம் மக்களுக்கு நாம் எதிரானவர்கள்   அல்லர். முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் துன்பியல் சம்பவம். போராட்டத்தில் முஸ்லிம்...

மீண்டும் யாழில் வாள்வெட்டு!! இருவர் படுகாயம்!

மல்லாகம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் கார் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் அளவெட்டி, நரிஜிட்டான் முகரி பகுதியில் இடம் பெற்றுள்ளது. சுன்னாகம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் கத்திகளுடன் வந்த குழு நரிஜிட்டான் முகரி பகுதியில் இருந்த குழுவுடன் மோதலில் ஈடுபட்டதாகவும்...

ஜனாதிபதியைச் சந்திக்கக் கோரும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரூடாகவே விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் கொல்லப்பட்டமை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தக் கோருவதற்கும், கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு வழங்கக் கோருவதற்குமே சிறிலங்கா அதிபரைச் சந்திக்க மாணவர் ஒன்றியம் அனுமதி கோரியுள்ளது....

பலாலியில் 454 ஏக்கரில் இராணுவத்தினருடன் இணைந்து மக்கள் வாழ்வதற்கு அனுமதி!

நாளைக்கு யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மைத்திரிபாலசிறிசேன, பலாலி இராணுவ கொன்டோன்மன்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் பிரதேசத்தினை மக்களிடம் கையளிப்பது தொடர்பான தகவலை வெளியிடவுள்ளார். பலாலி விமான ஓடுபாதைக்கு மேற்காக உள்ள பொதுமக்களின் காணிகளே நாளை விடுவிக்கப்படவுள்ளதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்படவுள்ள குறித்த...

பருத்தித்துறையில் பாரிய மீன்பிடித்துறைமுகம்!

நாட்டின் பாரிய மீன்பிடித்துறைமுகம் பருத்தித்துறைக்கு அண்மையில் அமைக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் வடக்கு மீனவர்களுக்கு 150 மீன்பிடிப் படகுகளை இலவசமாக வழங்குவதுடன், 50 வீத நிவாரணக் கடன் அடிப்படையில், கடற்றொழில் உபகரணங்கள் வழங்குவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சரை மேற்கோள் காட்டி தகவல் திணைக்களம் செய்தி...

‘பிரபாகரன் படை’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரம்!

யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தமிழ் காவல்துறையினரை வெளிமாவட்டங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்துகொண்டு செல்லுமாறு பிரபாகரன் படை என்ற பெயரில் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாண நகரத்தின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும்...

மரநடுகை மாதத்தில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம்

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுகை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (30.10.2016) அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,...

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏன் பாரபட்சம்? பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி

யாழ்ப்பாண முஸ்ஸிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று யாழ் கிளிநொச்சி முஸ்ஸிம் பணிமனையின் தலைவரும் யாழ் மாவட்ட மீள்குடியேற்ற செயலனியின் தலைவரும் ஆகிய மௌலவி எச்.எம் சுபியான் இன்று தெரிவித்தார். வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் கடந்த 1990ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதி விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts