Ad Widget

முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பே!- சுமந்திரன்

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் இன்று கொழும்பில் முஸ்லீம் சமூகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட  நினைவுநாள் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட சுமந்திரன் அவர்கள் தனது உரையில் வடமாகாண முஸ்லீம்கள் மீள்குடியேற்றத்தில் வடமாகாண முதல்வர் தடை போட்டுவருவதாக குற்றம் சாட்டியுள்ளதோடு கூட்டமைப்பால் மேலதிக  ஆசனம் ஊடாக  வடமாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்களுக்கு உறுப்பினராக இருப்பதற்கு எதிராக  சில முஸ்லிம் தலைவர்கள் அழுத்தம் கொடுத்துவருவதாகவும் அவருக்கு அவ்வாறு யாரும் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் வடமாகாணத்தில்சிறப்புடன் பணியாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டத்தினை அனைத்து தமிழ் ஜனநாயகவாதிகளும் தவறு என்று ஏற்று கொண்டிருக்கின்றார்கள். சர்வதேச சட்டப்படி
”முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பே ”  அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. நான் இப்படி சொல்லும் போது தமிழ்மக்கள் என்னைப்பார்த்து அப்படியாயின் நீங்கள் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை இனப்படுகொலை என்று சொல்லி உள்ளீர்களா என்று கேட்கிறார்கள் . ஆம் நான் தெளிவாக சொல்லியுள்ளேன் இதை  இலங்கை பாராளுமன்றில் பலமுறை அது இனப்படுகொலை என்று பேசிஉள்ளேன்.

இன்னோர் கேள்வியாக அவர்கள் கேட்பது முஸ்லிம்களுக்கு நிகழ்ந்தது இனச்சுத்திகரிப்பே என்று கூறுகையில் முஸ்லிம்கள் தமிழ்மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்று எப்போதாவது சொல்லியுள்ளார்களா என்பது. அதற்குரிய பதிலை என்னால் சொல்ல முடியவில்லை. நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.

வடக்கு மாகாண சபை நிர்வாகம் முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் வேண்டும் என்று அசமந்த போக்கினை மேற்கொள்கிறது.அவ்வாறு செய்வது வடக்கில் தமிழர் மீள்குடியேற்ற செயற்பாட்டினைக்கூட இது பாதிக்கும். வடக்கு முதல்வரின் கையில் மீள்குடியேற்ற விடயம் செயலற்று கிடக்கிறது என்று மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் கூறியுள்ளார் இதனை நான் ஏற்றுகொள்கின்றேன். இதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்.

அதேவேளை கிழக்கிலும் முஸ்லிம்களால் தமிழ் மக்களின் மீள்குடியேற்றங்களுக்கு பிரச்சனை உள்ளதாக சொ்ல்லப்படுகின்றது.அதுவும் பேசப்படவேண்டும். தமிழகத்தில் இருந்து தமிழ் அகதிகள் எவ்வாறு மீளதிரும்ப பயப்படுகின்றார்களோ அதேபோலவே புத்தளத்தில் இருந்தும் முஸ்லிம்கள் மீள்திரும்ப பயப்பிடுகின்றனர்.முகாம் களில் இருப்பவர்கள் கூட இந்த நிலைப்பாட்டில் உள்ளனர் இந்த பயம் போக்கப்படவேண்டும்

இந்நாட்டில் ஒரேமொழிபேசும் சிறுபான்மை இனங்கள் இணைந்து ஒன்றாக கேட்டால் கேட்டது கிடைக்கும் . ஆனால் பிரிந்து சலுகைகளுக்காக கேட்டால் ஒருத்தருக்கும் ஒன்றும் கிடைக்காது.
சமஸ்டிக்கு எதிராக மன்னார் அமைச்சர் ஒருவர் எதிராக கருத்து தெரிவிக்கிறார். இவர்களது நிலைப்பாடு முஸ்லிம்களுக்கு எதிரானது. தீர்வு விடயத்தில் எங்களுக்கிடையில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவேண்டும் சரியான தீர்மானம் எடுக்கப்படவேண்டும். இரண்டு சமூகமும் இணக்கமாக போகின்ற ஒரு இடத்துக்கு வரவேண்டும். என தெரிவித்தார்

Related Posts