Ad Widget

தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் தமிழ் இணையத்தளம் முடக்கம்!

தமிழ் இணையத்தளம் ஒன்று, உண்மைக்கு புறம்பான பரப்புரைகளை மேற்கொண்டதுடன், நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்களை விமர்சனம் செய்யும் வகையில் செயல்படுவதாக தெரிவித்து அதன் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.

ஊடகத்துறை அமைச்சின் முறைப்பாட்டை அடுத்து தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, இந்த தமிழ் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் சிரிசேன தெரிவித்துள்ளார்.

இந்த இணையத்தளம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும், ஊடக அமைச்சும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில், விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த இணையத்தளத்தின் முடக்கம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டமை தொடர்பில் குறித்த இணையத்தளம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அந்த காரணத்தை முன்வைத்து வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் கடந்த 20ஆம் திகதி அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts