Ad Widget

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏன் பாரபட்சம்? பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி

யாழ்ப்பாண முஸ்ஸிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று யாழ் கிளிநொச்சி முஸ்ஸிம் பணிமனையின் தலைவரும் யாழ் மாவட்ட மீள்குடியேற்ற செயலனியின் தலைவரும் ஆகிய மௌலவி எச்.எம் சுபியான் இன்று தெரிவித்தார்.

capture

வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் கடந்த 1990ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதி விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனை நினைவுகூறும் வகையில் இன்று யாழ் மாவட்ட முஸ்ஸிம் மக்கள் தமது தற்காலிக வீடுகள் மற்றும் பொது இடங்களில் கறுப்பு கொடி கட்டி பறக்க விட்டுள்ளதுடன், வாகனங்களிலும் கறுப்பு கொடிகளை கட்டி பறக்க விட்டுள்ளனர்.

யாழ், சாவகச்சேரி, வேலணை ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுக்கு உட்பட்ட பகுதி முஸ்ஸிம் மக்கள் இவ்வாறு தமது எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.

இத்தருணத்தில் முஸ்ஸிம்களின் அபிலாசசைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொண்டு அரசு உடன் தீர்வினை பெற்றுத்தர வேண்டுமென இந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

மீள்குடியேற்றுவதற்காக 2165 குடும்பங்கள் உள்ளவாங்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் சரியான முறையில் மீள்குடியேற்றம் செய்ப்படவில்லை என்றும், யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் ஏன் பாரபட்சம் என்றும் இம்மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Posts