Ad Widget

ஆவாகுழு-கோத்தா தொடர்பு விரைவில் அம்பலமாகும்-மீளவும் உறுதிப்படுத்திய அமைச்சர் ராஜித

ஆவா குழு ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஸ கூறினாலும், அவரது ஆசீர்வாதத்துடனேயே அந்தக் குழு ஆரம்பிக்கப்பட்டது என்பதை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன மீளவும் தெரிவித்துள்ளார்

ஆவா குழுவிற்கும் – கோட்டாபயவிற்கும் இருக்கும் தொடர்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜித்த குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆவா குழு என்பது கோட்டாபயவின் ஒரு படைப்பென கூறியிருந்தார். எனினும், அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை கோட்டாபய முழுமையாக மறுத்திருந்தார்.

ஆவா குழு ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது என கோட்டாபய ராஜபக்ஸ கூறியிருந்தாலும், அவருடைய முழுமையான ஆசீர்வாதத்துடனேயே அந்தக் குழு ஆரம்பிக்கப்பட்டதாகவும், அது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம், பிரதீப் எக்னலிகொட, நடராஜா ரவிராஜ் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் படுகொலைகளிலிருந்து கோட்டாபய தலைமையிலான குழுவினரால், தப்பிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.

இந்தக் கொலைகள் பற்றிய விசாரணைகளின் இறுதியில் உண்மையில் யார் தொடர்புபட்டுள்ளார்கள் என்ற உண்மையை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆவா குழு தொடர்பில் தான் கூறிய கருத்து இராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது என கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். எனினும், இராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் தான் எதனையும் கூறவில்லையென்றும், இவ்வாறான குழுக்களை உருவாக்குவதற்காக இராணுவத்தினரை அனுப்பி அவர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியது கோட்டாபய ராஜபக்‌ஸ தான் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் புலனாய்வு அதிகாரிகள் மீது வாள் வெட்டு சம்பவத்துக்கு உரிமை கோரி ஆவா குழு என்ற பெயரில் துண்டுப் பிரசுரமொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆவா குழு தொடர்பில் பல கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இந்தக் குழு உருவானதன் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையிலேயே கோட்டாபயவே ஆவா குழுவின் உருவாக்கத்தின் பின்னணி யில் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். எனினும் இக்குற்றச்சா ட்டை கோட்டாபய ராஜபக்‌ஸ மறுத்திருந்த நிலையில், தனது குற்றச்சாட்டை அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Posts