இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான காரைநகர் பேரூந்து தனியார் பேரூந்தை ஆலடி சைவமகாசபை அண்மித்த பகுதியில் மோதி தள்ளியுள்ளதுடன்.இருவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த இருவரும் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதர்க்கான நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.
ஆலடி சைவமகாசபை அண்மித்த பகுதியில் விபத்து ஏற்பட்டதால்.போக்குவரத்து பாதை தடைப்பட்டுள்ளதுடன். பயணிகள் மாற்று வழியை பயன்படுத்தி வருகின்றனர்.