Ad Widget

கிளிநொச்சி பொதுச் சந்தை வடக்கு முதலமைச்சரால் திறந்துவைப்பு!

கிளிநொச்சி பொதுச்சந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்துள்ளார்.

c-v-opens-kili-fair-3

கடந்த செப்ரெம்பர் மாதம் 16ஆம் திகதி கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் 110 வர்த்தக நிலையங்கள் முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளன.

இதனையடுத்து நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு தலா 20ஆயிரம் ரூபா பணத்தினை வழங்கி விரைவாக வர்த்தக நிலையங்களை அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்ததோடு அடிக்கல்லும் நாட்டிவைத்தார்.

இதன் அடிப்படையில் கரைச்சி பிரதேச சபையினால் துரித கதியில் 11.3 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 45 வர்த்தக நிலையங்களையே, நேற்று வடக்கு முதலமைச்சர் திறந்துவைத்துள்ளார்.

இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts