Ad Widget

வரவு செலவு திட்ட உரை ஆரம்பமானது

எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்ட உரை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியேரின் தமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் தற்போது வாசிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அறிவை மையப்படுத்திய பொருளாதார முறை அறிமுகம்!

அறிவை மையப்படுத்திய பொருளாதார முறையை ஏற்படுத்துவது அரசின் நோக்கம் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.

2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தும் போதே நிதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்ட சில முக்கிய விடயங்கள்…,

இந்த முறை வரவு செலவு திட்டத்தில் பொது மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் முதல் தடவை என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.

2017ஆம் ஆண்டு – வறுமை ஒழிப்பு ஆண்டாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ரவி கருணாநாயக்க மேலும் கூறினார்.

இதேவேளை 2017ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியாக காணப்படும் வித்தியாசம் 2020ஆம் ஆண்டளவில் சீர் செய்யப்படும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

கோழி இறைச்சியின் அதிகூடிய சில்லறை 420 ரூபா

கோழி இறைச்சிக்கு அதிகூடிய சில்லறை விலை கிலோகிராம் ஒன்றுக்கு 420 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுமானால் கோழி இறைச்சி இறக்குமதி செய்வதற்கு அரசு பின் நிற்காது என்றும் அவர் கூறினார்.

விவசாயம், மரக்கறி மற்றும் பழவகை உற்பத்திக்கு 50% நிவாரணம்

விவசாயம், மரக்கறி மற்றும் பழவகை உற்பத்திக்கு 100க்கு 50 வீத கடன் வட்டி நிவாரணம் வழங்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தமது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

இதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விவசாய பொருட்களின் இறக்குமதிக்காக சேர்க்கப்பட்டுள்ள சில வரிகளை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தில் உணவு பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயத்துறை சார்ந்த செலவினங்களுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தமது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பம், காணிகளை விடுவித்தல், பிரதான உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவசாய கூட்டுறவு அமைப்பின் ஊடாக 75 சதவீத வட்டி சலுகை வழங்கும் நோக்கில் 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாடசாலை ஆசிரியர்களுக்கு TAB

28,000 ஆசிரியர்களுக்கு டெப் (TAB) வழங்குவதாகவும், இதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட 175,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் உயர்தரமான வகுப்பறை வசதிகளை வழங்குவதற்காக 6,500 மில்லியன் நிதி ஒதுக்குவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக வைபை வழங்குவதற்கு தொலைத் தொடர்பாடல் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் வருட இறுதிக்குள் நாட்டில் உள்ள 1000 பாடசாலைகளின் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக 3000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலைகளில் கல்வி வகுப்பறைகள் மற்றும் கட்டிடங்களை நிர்மானிப்பதற்க்கான 21,000 மில்லியன் ரூபா ஒதுக்குவதாகவும் கூறினார்.

தேயிலை, றப்பர், தெங்குக்கான தானியங்கு பரிமாற்ற செயன்முறை

தேயிலை, றப்பர், தெங்குக்கான தானியங்கு வர்த்தக பொருள் பரிமாற்ற செயன்முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடூ செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

விசேட தேவையுடைய சிறார்களுக்கு நாளாந்தம் கொடுப்பனவு அதிரிப்பு

விசேட தேவையுடைய சிறார்களுக்கான நாளாந்த கொடுப்பனவு 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி கொடுப்பனவாக 2 லட்சம் ரூபா வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

Related Posts