- Friday
- May 8th, 2026
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளியாக (KYANT) மாறியுள்ளது. இது இலங்கையின் வடகிழக்கே 1300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் இலங்கைக்கு எவ்வித நேரடி பாதிப்புகளும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...
களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்கமுவ, வன்னிகுடாவெவ பிரதேச வீடொன்றில் தாயொருவரை கோழிக் கூண்டில் அடைத்து சங்கிலியால் கட்டி வைத்திருந்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் 85 வயதுடைய முஸ்லிம் வயோதிப தாயொருவர் கோழிக் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து குறித்த தாய் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று...
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை எதிர்த்து, அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு ஆதரவாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பதில் முதலமைச்சர் குருகுலராஜா ஆகியோரின் இணைத்தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது,...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதாவது சக்திகள் இயங்கியிருந்தால், அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார். மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தை ஒரு...
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுதிய இந்தக் கடிதத்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாது எனவும் இலங்கையின் அரச கரும்மொழிகள் சிங்கள, தமிழ் மொழிகள் என நினைவுபடுத்த விரும்புவதாகத்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை தகவல்களை வெளியிடவேண்டாமென விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு சிறீலங்கா காவல்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கொக்குவிலில் கடந்த வியாழக்கிழமை இரவு இரண்டு மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை தொடர்பாக சிறீலங்காக் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விசாரணையை முன்னெடுக்க விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன....
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில், கலந்துகொண்டிருந்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரத்னாரத்நாயக்விடம், யாழ். மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில், ஊடகவியலாளர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். இதன்போது அமைச்சர் ரத்நாயக்க, திடீரென அவ்விடத்தை விட்டு எழுந்துச் சென்றார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சம்பவம் இடம்பெற்ற குளப்பிட்டி பகுதியில் தடயவியல் பொலிஸார் இன்று மேற்கொண்ட ஆய்வில் துப்பாக்கி ரவைகளின் கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சற்று தூரத்தில் கொக்குவில் சந்தைக்கு முன்பாகவுள்ள பகுதியில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ். பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார்...
யாழ்.பல்கலை மாணவர்களின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக சுயாதீன விசாரணைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந் நடவடிக்கையின் பின்னர் மேலும் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் தீர்மானிக்குமென குறிப்பிட்டுள்ளார். யாழ்.மாணவர்களின் மரணம் தொடர்பில் எவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென, நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்...
யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்ஷன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அதனைக் கண்ணால் கண்ட மாணவன் கஜன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு கிடைக்கப்பெற்ற சீ.சீ.ரீ.வி பதிவுகள் மற்றும் ஏனைய தகவல்கள் மூலம் இவ்விடயம் வெளிவந்தவண்ணமுள்ளதாக ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களை...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நேற்றைய தினம் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலை அடுத்து அங்கு வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ். மாவட்டத்தில் பொலிஸார் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுத்தப்படாமல் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, கலகம் தடுப்பு பொலிஸாரும் ஆங்காங்கே பாதுகாப்பு...
கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் காவல்துறையினரால் இரண்டு இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்டு அதன் பதற்றம் தணிவதற்குள் நேற்று முன்தினம் சங்கானையில் இளைஞன் ஒருவர் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித் தாக்குதலை நடாத்தியுள்ளனர். யாழ்.ஆஸ்பத்திரி வீதி சங்கானை பகுதியைச் சேர்ந்த தர்மபாலன் சுகிர்தன் (வயது – 25) என்ற இளைஞனை, கோப்பாய் டிப்போவிற்கும் உரும்பிராய் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து காவல்துறையினர்...
நேற்று ஏ-9 வீதியில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், பாரஊர்தியில் வந்த பத்து மர்ம நபர்கள், அரசினர் பேருந்தை வழிமறித்து அதற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பேருந்துள் நுழைந்த குறித்த மர்ம நபர்கள் பேருந்து நடத்துநரிடமிருந்து பணத்தினையும் ரிக்கற் புத்தகத்தையும் பறித்துச் சென்றதுடன் பேருந்தையும் தாக்கியுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து, வவுனியா நோக்கி புறப்பட்ட பேருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம்...
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த யாழ். பல்கலைகழக மாணவனான விஜயகுமார் சுலக்ஷனின் வீட்டுக்கு அருகில் நின்ற யாழ். பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஊரார் மீதும் இலக்க தகடற்ற ஜீப் ரக வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் கந்தரோடை ஆலம்பிட்டி சந்திக்கு அருகில் செவ்வாய் இரவு 7 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், பொலிஸாரை நோக்கி மிகவேகமாகச் செலுத்தப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் வானத்தைநோக்கி சுட்டபோது ஒரு மாணவன் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்ததாகவும் ஆரம்ப விசாரணைகள் மூலம் மூலம் தெரியவந்திருப்பதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்....
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில், அண்மையில் மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தின் விளைவாக உயிரிழக்க நேர்ந்த சம்பவத்துக்கு, சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, கடும் கண்டனத்தை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மாணவர்கள் இருவரும் உண்மையில் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்திருக்கும் பட்சத்தில், துப்பாக்கி பிரயோகமானது பின்னிருக்கையில் இருந்தவரை...
கடந்த 20ம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு மாணவர்களில் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , இரு பல்கலைக்கழகமாணவர்களின் அநியாயமானஅகாலமரணம் ஆழ்ந்ததுயரத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது....
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அங்கு, கொள்ளைச் சம்பவங்களோ, குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களே அல்லது உயிரச்சுறுத்தல் போன்ற துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவர்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்ல்ப்பட்ட சம்பவத்தில் உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறி்க்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராசா கஜன், பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் யாழ்ப்பாண சோதனைச்சாவடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிங்களக்காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் பெருத்தத்...
“ஆவா” என்ற இயக்கத்தின் ஊடாக யாழ்ப்பாண பிரதேசத்தில் விநியோகம் செய்யப்படுகின்ற துண்டுப்பிரசுரம் தொடர்பில் வடக்கு பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், சுண்ணாகம் பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆவா என்ற தமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதாக அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த துண்டுப்பிரசுரம் யாழ்ப்பாணம் நகரம் பூராகவும் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
