நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பல நல உத்தியோகத்தர்களின் நிர்வாக முடக்க முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த 9 நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் நிர்வாக முடக்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து யாழ்ப்பாணக் காவல்துறை அதிகாரிக்கும் ஊழியர்களுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி நாளைக் காலை (புதன்கிழமை) 10.00 மணிக்கு முன்னர் உரிய தீர்வை வழங்காவிடின் மீண்டும் நிர்வாக முடக்க போராட்டம் தொடருமென சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.