ஆவா குழுவின் பின்னணியில் புலம்பெயர் அமைப்புக்கள்?

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைய நாட்களாக ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழுவின் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், ஆவா குழுவிற்கு புலம்பெயர் அமைப்புக்களிடமிருந்து உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவா குழு உறுப்பினர்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர்...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை : அரசாங்கம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்பய்பட்டு எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு அமர்வுகளில் பங்கேற்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு...
Ad Widget

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. புதிய மாணவர்கள் ஜனவரி மாதம் கல்லூரிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின், ஆசிரியர் கல்விக்குப் பொறுப்பான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்தார். 50 சதவீதமான மாணவர்கள் திறமை அடிப்படையிலும், ஏனைய 50 சதவீதமானோர் பிரதேச செயலாளர் மட்டரீதியிலும் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்....

சுவிட்ஸர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒன்பது ஈழத்தமிழர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

சுவிட்ஸர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தைடைந்த ஈழத்தமிழர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்ஸர்லாந்தில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 9 தமிழர்கள் விஷேட விமானம் மூலம் நேற்றைய தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்நிலையில் அவர்களை நேற்றைய தினமே கைது செய்திருந்த ஸ்ரீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை...

யோகி, புதுவை, எழிலன் உள்ளிட்ட 41 பேருக்கும் என்ன நடந்தது?

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் 41 பேர் உட்பட ஸ்ரீலங்கா இராணுவத்திடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களான யோகி, புதுவை, எழிலன் உட்பட 41 பேரும் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தமைக்கான சாட்சிகள் இருப்பதாக...

வடக்கு மாகாணத்திற்கான நிதியில் 1500 மில்லியன் ரூபா வெட்டு!

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட வரைபில் வடக்கு மாகாணத்துக்கான நிதியில் 1500 மில்லியன் ரூபாவை வெட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டதும், ஏனைய வருமானங்கள் அற்றதுமான வடக்கு மாகாணம் இதனால் திண்டாடி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் முதலமைச்சர்கள் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாகவும்,...

எலிக்காய்ச்சலால் ஒருவர் பலி, மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

கிளிநொச்சியில் எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவா் மரணமடைந்துள்ளார் என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி வயல் விதைப்பில் ஈடுப்பட்ட பின்னா் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளிநொச்சி மருதநரைச் சோ்ந்த 57 வயது நிரம்பிய விவசாயியே எலிக் காய்ச்சல் காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார். எனவே...

அம்புலன்ஸ் மோதி முதியவர் படுகாயம்

முழங்காவில் வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டி மோதியதில் காயங்களுக்குள்ளான முதியவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் குறிப்பிட்டனர். இச் சம்பவம், நேற்றுப் புதன்கிழமை (16) வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. கொழும்புத்துறை 4ஆம் குறுக்குத் தெருவினை சேர்ந்த பரமசாமி குசேலராஜா என்ற முதியவரே காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாச்சிக்குடாப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில்...

தந்தை மற்றும் மகன் மீது வாள்வெட்டு

நாச்சிக்குடாக் கடற்கரையில் பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது, நேற்றுப் புதன்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நாச்சிக்குடாப் பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்ற இவ்வாள் வெட்டுச் சம்பவத்தில், குமுழமுனை வீதி நாச்சிக்குடாப் பகுதியினைச் சேர்ந்த மீராசஜித்...

பருத்தித்துறையில் பஸ் மீது கல் வீச்சு

பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் மீது, இன்று வியாழக்கிழமை (17) அதிகாலை 5.20 மணியளவில் இனந்தெரியாதோர் கற்களால் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் கே. கந்தசாமி தெரிவித்தார். நெல்லியடி கொடிகாமம் வீதி அணஞ்சிலடியில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பஸ்ஸின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்தன. எனினும், பயணிகளுக்கு காயங்கள் ஏதும்...

அறைக்குள் வெட்டப்பட்டிருந்த கிடங்கிலிருந்து பணம், கஞ்சா மீட்பு

மாதகல் கோணாவளை வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில், கிடங்கு வெட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ 305 கிராம் கஞ்சா மற்றும் 76 இலட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரி டிக்கிரி பண்டாரா தெரிவித்தார். அத்துடன், வீட்டு உரிமையாளரான 24 வயதுடைய...

யாழில் வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் மீட்பு

இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டிற்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் பொலிசாரால் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் வெளிபிரசேத்தில் நேற்று இரவு 7.00 மணியளவில் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கல்லுன்டாய்வெளி பிரதேசத்தில் வெட்டுக்காயத்துடன் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் துடிதுடித்த நிலையில் கிடப்பதைக் கண்டு அப்பகுதியால் சென்ற மக்கள் பொலிஸாருக்கு...

யாழில் திருட்டுக் குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் இளைஞரும் கைது

திருட்டு குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் திட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரும், 19 வயதுடைய இளைஞர் ஒருவருமே நேற்று புதன்கிழமை இரவு இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் அவர்களது வீட்டில் வைத்தே கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்படும் போது, அவர்களது உடமையில் இருந்து...

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்காக அன்றையதினம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விஷேட ஒருநாள்...

புங்கையின் புதிய ஒளி அமைப்பால் புங்குடுதீவில் பனம் விதைகள் நடுகை

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு புங்குடுதீவில் இயங்கி வரும் புங்கையின் புதிய ஒளி என்னும் இளைஞர் அமைப்பால் புங்குடுதீவில் பனம் விதைகள் நாட்டப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை (15.11.2016) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு முதல் பனம் விதையை நாட்டி, நடுகையைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து புங்குடுதீவுப் பாடசாலைகளைச்...

தனியார் காணிக்குள் அத்துமீறிய விகாராதிபதியால் பதற்றம்

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி - பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள், இன்று புதன்கிழமை காலை வந்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறி, தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டதால் இந்த பதற்ற...

யாழில் மீண்டும் வேலைக்குத்திரும்பியுள்ள சுகாதார தொழிலாளர்கள்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார சபை சுகாதார தொழிலாளர்கள் மீண்டும் இன்று காலை தொடக்கம் தமது பணிக்கு திரும்பியுள்ளார்கள். யாழ்.மாநகர சபையின் சுகாதார சபை சுகாதார தொழிலாளர்கள் மீண்டும் இன்று காலை தொடக்கம் தமது பணிக்கு திரும்பியுள்ளார்கள். இந்நிலையில் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி வட பிராந்திய...

சித்திரவதை முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டவர் ஐ.நா.வில்

இலங்கையின் மிக மோசமான சித்திரவதை முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர் எனக் குறிப்பிடப்படும் குற்றப்புலனாய்வுப் பிரவின் பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ், ஜெனீவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. அமர்வில் கலந்துகொண்டுள்ளமை பாரிய எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக இருந்ததோடு, கொழும்பிலுள்ள நான்காம் மாடி சித்திரவதைகளுக்கும் அவரே பொறுப்பாக இருந்ததாகவும்...

‘ஆவா’ உறுப்பினர்களின் விளக்கமறியல் நீடிப்பு

“ஆவா“ குழுவின் உறுப்பினர்கள் 11 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

துணை மருத்துவ சேவை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

​பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த எட்டு தொழிற்சங்கங்கள், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். மருந்தக ஊழியர்களை, துணை சுகாதார சேவைக்குள் ஒன்றிணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, துணை மருத்துவ சேவை ஒன்றிணைந்த முன்னணியின் ஊடகச் செயலாளர் நஜித் சுமனசேன சுட்டிக்காட்டியுள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts