Ad Widget

யாழில் மீண்டும் வேலைக்குத்திரும்பியுள்ள சுகாதார தொழிலாளர்கள்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார சபை சுகாதார தொழிலாளர்கள் மீண்டும் இன்று காலை தொடக்கம் தமது பணிக்கு திரும்பியுள்ளார்கள்.

யாழ்.மாநகர சபையின் சுகாதார சபை சுகாதார தொழிலாளர்கள் மீண்டும் இன்று காலை தொடக்கம் தமது பணிக்கு திரும்பியுள்ளார்கள்.

இந்நிலையில் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் நடத்திய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று மாலையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்க ஊழியர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்தே பணிப்பகிஷ்கரிப்பு புாராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக 90 தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் சுகாதார தொழிலாளி ஒருவர் தன் உடம்பில் மணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts