- Sunday
- August 16th, 2026
கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலைமையில்தான் தற்போது தமிழர்கள் இருக்கிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது, பத்து வருடங்கள் நடைபெற்ற கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டுவந்தாக நம்மவர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்...
கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நவீன விதை சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கத்துக்கென 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விதை சுத்திகரிப்பு நிலையத்தை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம்...
இலங்கையர்கள் 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்று வருகின்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், சில இணையத்தளங்கள் போலியான வதந்திகளை...
தமிழில் தேசிய கீதம் பாடுவதை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறி, உயர் நீதிமன்றம் அந்த மனுவை, இன்று (18) நிராகரித்தது. இந்த மனு, மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, குறித்த மனு தொடர்பான சட்டமா அதிபரின் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய இதழியல் டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களுக்கான சாண்றிதழ் வழங்கும் விழா நாளை 19 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ்.நகர் ஜூம்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள ஊடக வளங்கள் பயிற்சி மைய மண்டபத்தில் பயிற்சி மையத்தின் பணிப்பாளர் தே.தேவானந்த் தலைமையில் இந்த நிகழ்வு...
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று காலை நடைபவனியொன்று இடம்பெற்றது. வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள கட்டிடத்தில் 1991 ஆம் அண்டு வவுனியா வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் முகமாக புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்து நடைபவனியொன்று அரம்பமாகி, வவுனியா நகர் வழியாக பூங்கா வீதியில் அமைந்துள்ள வளாகத்தின்...
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தோற்றம் பெற்ற ஆவாகுழு என்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒட்டுக்குழுவே என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது. இவர்கள் ஆவா குழு என்ற பெயரில் மாத்திரமன்றி முல்லைத்தீவு மாவட்டத்தில் இரும்புக்குழு என்ற பெயரிலும் கொள்ளையில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் சாடியுள்ளார். ஆவா குழு...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டு படுகொலைச் செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸார் ஐவரின் விளக்கமறியலும் யாழ் நீதவான் நீதிமன்றத்தினால் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையிலும் இன்று வெள்ளிக்கிழமை நீடிக்கப்பட்டது.
‘ஆவா’ குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் நிரபராதிகளாவே உள்ள நிலையில், உண்மைகள் நிரூபிக்கப்படும்வரை அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘ஆவா’ குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவிலலை எனவும் குறித்த...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உட்படுத்தும் வகையில் சிங்கள மொழியில் பாடலொன்று வெளியாகியுள்ளது. குறித்த பாடலில் சமஷ்டியை கோரும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் முட்டாள் மற்றும் பைத்தியம் என அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், புலி உருவ பொம்மை ஒன்றை காட்சிப்படுத்தி, அதனை தனது செல்ல பிராணியாக வடக்கு முதல்வர் வளர்ப்பதைப் போன்றும்...
வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று (18) கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த தாழ் அமுக்கம் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்கு காணப்படும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் மாணவர் வரவில் திருப்திகரமற்ற மாணவர்களை பாடசாலையில் இணைப்பதற்கான முயற்சியானது நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைகளில் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்படி மாணவர்களின் வீடுகளுக்குச்சென்று பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான விழிப்பணர்வும் இதன்போது வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தின் போது வீடுகள் மற்றும் பொது இடங்களில் நின்ற மாணவ...
வவுனியா உட்பட வட மாகாணத்தின் பல்வேறு இடங்களில் ஆயுத முனையில் மக்களை அச்சுறுத்தி கொள்ளைகளில் ஈடுபட்ட நால்வர் அடங்கிய கும்பலை பொலிசார் கைதுசெய்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுடன் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசாரணையின்போது குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். வவுனியாவின் நெடுங்கேணி, வீரபுரம், யாழ்ப்பாணம் – இளவாலை, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்தே கொள்ளைக் கும்பலைச்...
சிறீலங்காவில் சிங்கள மக்களை அச்சத்தில் உறையச்செய்துவிட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ இழைத்த தவறுகளை தாம் உணர்ந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், தவறுகளைத் திருத்திக்கொண்டு தாம் மீண்டும் ஆட்சிபீடம் ஏற மக்கள் தமக்கு வாக்களிக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். முன்னாள் ஆட்சியாளர்...
வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் முன்னணின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக ஈபிடிபியைச் சேர்ந்த தவநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இருப்பினும், மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரை நீக்கும் உரிமை கட்சியின் தலைமைக்கு இல்லையெனவும், அதனை வடக்கு மாகாணசபை அவைத்தலைவரே முடிவு...
இனவாதம் பேசுவோருக்கெதிராக எந்தவொரு தயவு, தாட்சயணியமும் பாராது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபி மைத்திரிபால சிறிசேன காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றித் தெரிவிக்கையில், நேற்றிரவு எட்டு மணியிலிருந்து 10.00 மணிவரை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில்...
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத் தளத்தை ஹக் செய்த இளைஞனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி குறித்த இணையத்தளத்தை ஹக் செய்து, இலங்கை இளைஞர்கள் என்ற பெயரில் அடையாளம் காணப்படாத குழுவினர் தகவலொன்றை பதிவிட்டிருந்தனர். கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்துவதாகவும் நாட்டை...
பிளவுபடாத நாட்டில் அனைத்துமக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்ப மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் 5ம் நாள் விவாதாம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. நேற்றய பாராளுமன்ற விவாதத்தை எதிர்க்கட்சி தலைவர் ஆரம்பித்து...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது பற்றி பாராளுமன்றக்குழு ஆராயவுள்ளது. இதற்கென விசேட பாராளுமன்ற குழுஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழு இந்த விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
மாதகல் கடற்கரை பகுதிக்கு அருகாமையில், ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வூர் மக்களால் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு மாறு வேடத்தில் சென்ற பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர். இதன்போது அந்தப் பெண்ணிடமிருந்து 09 கிலோவும் 305 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் மாதகல்...
Loading posts...
All posts loaded
No more posts
