- Sunday
- August 16th, 2026
கொழும்பு - நாரஹேன்பிட்டியில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் . நடராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்மராட்சி...
'எமது உரிமைகளுக்காகப் போராடி மடிந்தவர்களை நினைவு கூறும் உரிமை, எமக்கு உண்டு. அதனை, கடந்தகால அரசாங்கம் போன்று, தடையை ஏற்படுத்தியோ நினைவுநாளை அனுஸ்டிப்பதனை தடுத்தாலோ, நல்லாட்சியின் முகத்திரை கிழியும்' என, வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் கடந்த சனிக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்....
2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளுக்கு நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சாதாரணத் தரப்பரீட்சை டிசெம்பர் மாதம் 6ஆம் திகதியன்று ஆரம்பமாகி, டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்றது. இதேவேளை,...
வடமாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும், ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 07:30 க்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு, பிற்பகல் 01:30 க்கு முடிவடையும்...
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உபகுழுக்களில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குழுவின் தலைமையிலான குழுவின் இடைக்கால அறிக்கையில் மாகாணசபைகள் உள்ளுராட்சிசபைகள் சம்பந்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. 6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு இன்று அறிக்கை கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அந்நிலையில் அதிகாரப்பரவலாக்கல் சம்பந்தமான குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிக்கட்டமைப்புக்களை பலப்படுத்தி அதிகாரப்பரவலாக்கத்தை செய்ய வேண்டும்...
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வல்லை வெளியின் இருபுறங்களிலும் இன்று சனிக்கிழமை மரங்களை நடுகை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தொண்டைமானாறு வீரகத்தி மகாவித்தியாலய மாணவியொருவர் முதலாவது மரக்கன்றை நாட்டி மரநடுகையை ஆரம்பித்து வைத்துள்ளார். தொண்டைமானாறு கடல்நீரேரி ஊடறுத்துச் செல்லும் தாழ்வான பகுதியாக வல்லைவெளி...
ஐ.எஸ். அமைப்பில் 32 இலங்கையர் இணைந்துள்ளதாக பாராளுமன்றில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நேற்று தெரிவித்த தகவலுக்கு முஸ்லிம் கவுன்சில் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பொது மக்களை தவறாக வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐஎஸ் அமைப்பில் இணைந்து உயிரிழந்த இலங்கையர் தொடர்பில்...
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களிடமிருந்து, ஆசிரியர்கள் பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விழாக்கள் மற்றும் பிறந்த நாள் நிகழ்வுகளின் போது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பெறுமதியான பரிசுபொருட்கள் வழங்குவது வழமையாக இருந்து வருகின்றது. எனினும் அடுத்த வருடம் முதல் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் யாரும் பரிசுப் பொருட்கள் வழங்கக் கூடாது என கல்வி அமைச்சர்...
வடக்கில் பொருத்துவீடுகளை திணிப்பதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பிர்கள் பலர் உள்ளபோதிலும், தேசியப் பட்டியல் மூலம் தெரிவான டி.எம்.சுவாமிநாதன் ‘ஏஜன்ட்’ போன்று செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் வாசிப்பின்போது உரையாற்றுகையிலேயே...
2006 ஜனவரி மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 9 ஆண்டுகளில், இலங்கையில் ஊடகவியலாளர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில், அரசாங்கம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஜே.வி.பியின் எம்.பியான நளிந்த ஜயதிஸ்ஸ, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி...
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின்படி வடமாகாணத்திற்கான பாரிய அபிவிருத்தி என்பது வெறும் கண்துடைப்பு மாத்திரமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், பிரதமர்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை நேற்று தனது பிறந்த நாளில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தனது 71 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இணையத்தளத்தை http://www.mahindarajapaksa.lk/ ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவினர் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுபர்களாக இருப்பின் அவர்கள் இலங்கையின் பாரிய குற்றங்களுக்கான சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படலாம். அதைவிடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதானது தேவையற்றதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தொடரும் கைதுகள் தொடர்பிலும் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது...
வடமாகாண மாணவர்களின் கல்வியைக் குழப்புவதற்கு, தேவையற்ற பல தீய சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை முறியடிப்பதற்காக பொலிஸாரும் மக்கள் குழுக்களும் முயற்சி செய்கின்ற போதும், மாணவர்களில் சிலரும் வேறு சதிகாரக் கும்பல்களும் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் –...
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடியினை பயிரிட்ட ஒருவரை யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மணியம் தோட்டம் பகுதியில் ஒருவர் கஞ்சா வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் றப்பர் சாடியினுள் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மூன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை கைப்பற்றப்பட்டிருந்த கஞ்சா செடிகளின் பெறுமதியானது ஐயாயிரம்...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரேனில் வைத்து அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்வதற்காக உக்ரேனில் தங்கிநின்றபோதே கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த இரத்னசிங்கம் வினோதரன் வயது 32 என்ற இளைஞரே அந்நாட்டு...
வெளிக்கள சுற்றுலா சென்ற போது, பருத்தித்துறை இன்பர்சிட்டி கடலில் முழ்கி உயிரிழந்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவர்கள் நால்வரின், 17ஆம் ஆண்டு நினைவு தினமும் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த போது ரயிலில் மோதுண்டு இறந்த பருத்தித்துறை கல்லூரியின் மாணவன் ஒருவரின் பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு நாளும், வியாழக்கிழமை (17) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பொதுமண்டபத்தில் இடம்பெற்றது....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனால் விண்ணுக்கு ஏவப்பட்ட செய்மதி, காணாமல் போய்விட்டது என்று சுட்டிக்காட்டிய ஜே.வி.பி.யின் எம்.பி.யான நளிந்த ஜயதிஸ்ஸ, அந்த செய்மதியைக் கண்டுபிடிப்பதற்கு, இன்னுமொரு செய்மதியை அனுப்புங்கள் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்...
யாழ்ப்பாணத்தில் பல்வேறான கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரையை குத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய நீதித்துறை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, வடக்கில் உள்ள சாதாரண தமிழ் மக்களுக்கும் புலி முத்திரை குத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார். இராணுவத்தினரை வேட்டையாடுவதாகவும் எம்மீது குற்றச்சாட்டொன்றுள்ளது. இந்த நாட்டில் சட்டமொன்று இருக்கிறது. இராணுவத்தினரை நாம்...
2017 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் இறுதி நாளான நேற்று (18) மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றது. 162 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் . எதிராக 55 பேர் வாக்களித்தனர். இணக்கப்பாட்டு அரசாங்கத்தில் அங்கம்...
Loading posts...
All posts loaded
No more posts
