ஹாட்லிக் கல்லூரி மாணவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

வெளிக்கள சுற்றுலா சென்ற போது, பருத்தித்துறை இன்பர்சிட்டி கடலில் முழ்கி உயிரிழந்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவர்கள் நால்வரின், 17ஆம் ஆண்டு நினைவு தினமும் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த போது ரயிலில் மோதுண்டு இறந்த பருத்தித்துறை கல்லூரியின் மாணவன் ஒருவரின் பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு நாளும், வியாழக்கிழமை (17) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பொதுமண்டபத்தில் இடம்பெற்றது.

ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியம் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. 1999 ஆம் ஆண்டு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் உயிரியல் பிரிவு மாணவர்கள், வெளிக்கள சுற்றுலா சென்றிருந்த போது பாலகிருஸ்ணன் பிரதீபன், சிவநாதன் ரவிசங்கர், சுந்தரலிங்கம் சிவோத்தமன், பூரணமூர்த்தி கந்தர்வன், ஆகியோர் 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி உயிரிழந்திருந்தனர்.

அதே போல், 2004ஆம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி ரயிலில் மோதுண்டு இறந்த பல்கலைக்கழக மாணவன் மரியரட்ணம் குணரட்ணம் ஆகியோரின் நினைவு தினம், வருடாந்தம், பழைய மாணவர் நிதியத்தினால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந் நிகழ்வில் இரத்தானம், கல்விக்கான புலமைப்பரிசில், பொதுஅறிவு போட்டியில் 1ம், 2ம், 3ம் இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குதல், இறந்த மாணவர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு, வெளிக்கள சுற்றுலா சென்ற ஹெட்லிகல்லூரி, வடஇந்து மகளீர்கல்லூரி, பருத்தித்துறை மெதடிஸ் உயர்தர பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. காலை இன்பர்சிட்டி கடலில் இடம்பெற்ற பிரார்தணையினை தொடர்ந்து இன் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts