- Sunday
- August 16th, 2026
இலங்கையில் பாதசாரிகள் வீதிகளைக் கடக்க இடப்பட்டுள்ள மஞ்சள் கோடுகள் அனைத்தையும் டிசம்பர் மூன்றாம் திகதி முதல் வௌ்ளைக் கோடுகளாக மாற்ற தீர்மானித்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டம் டிசம்பர் 3ம் திகதி மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அனைத்து மாகாணங்களுக்கும் இந்த நடவடிக்கையை செயற்படுத்தவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின்...
நான் ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல், 13வது அரசியலாப்பு சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண பொலிஸ் ஆணைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதன் ஊடாக அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் பொலிஸ் சேவைக்கான ஆளணி உள்வாங்கப்பட்டு, பணிகளில் அமர்த்தப்படுவதன் ஊடாக அந்தந்த பகுதிகளின் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவது இலகுவாக...
யாழ். மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 138.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இக்காலநிலை இன்னும் மூன்று தினங்களுக்கு தொடரும் எனவும் திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன், திங்கட்கிழமை (21) தெரிவித்தார். நாட்டில் பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில், பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகிறது. கடந்த 20ஆம் திகதி காலை 8.30 மணியில்...
ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நிலைத்து நிற்கும் நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்ற ஒரு மாத காலப் பயிற்சிநெறி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையைச் சேர்ந்த நீர் முகாமைத்துவத்துடன் தொடர்பானவர்களுக்கென மாத்திரமே விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயிற்சிநெறியில் இலங்கையில் இருந்து 15 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். வடக்கில் நிலத்தடி நீர் தொடர்பாக அதிக பிரச்சினைகள்...
இராணுவத்தினரின் வசத்திலுள்ள, கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கச் சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் குறித்த பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சிக்கு திங்கட்கிழமை விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், கிளி.மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, யுத்த பாதிப்புக்கு உள்ளாகிய மேற்படி...
கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 6 முறைப்பாட்டு மனுக்களை விசாரிக்கும் திகதியை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர உட்பட சிலர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக எமது செய்தியாளர்...
நாட்டின் தென்கிழக்கு திசையில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் மத்திய, சப்ரகமுவ, மேல், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை...
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்ற கொள்கையை வலிறுத்தி உயிர் தியாகம் செய்த தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களின் ஆத்மாக்களினால் இன்றும் அந்த கொள்கைகள் வலுவூட்டப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நடராஜா ரவிராஜ் உள்ளிட்ட பலரின் ஆத்மாக்களுக்கு நன்றியாக செயற்படுவதுடன் அவர்களின் இலட்சியத்திற்காக தொடர்ந்தும்...
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வன்வலுவை விட மென்வலு அரசியல் நடவடிக்கைகளின் மூலமே பல வெற்றிகளை ஈட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் தன்னை மென்வலு அரசியல்வாதி என்று அழைப்பதை பெருமையாகக் கருதுவதாகவும் மாமனிதர் நடராஜா ரவிராஜின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற...
நவக்கிரி, ஈவினை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை வீதியால் சென்ற பெண்னின் 2 பவுண் தங்கச்சங்கிலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக அச்சுவேலிபொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் நெல்லியடி கரவெட்டி பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினார். வீதியால் சென்ற குறித்த பெண்னை இடைநடுவில் மறுத்து, கைப்பையினை...
யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் மீது, மிளகாய்பொடி வீசி ஆயுதங்களை பறிக்க முற்பட்ட சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியூடாக மண் கடத்தல் இடம்பெறுவதையடுத்து, கெட்டிசந்தி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பகல் கடமைக்கு 5 பேரும், இரவுக் கடமைக்கு 5...
கடந்த 18ம் திகதி மாவை எம் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றிய உரையின் முழுவடிவம். 2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது உரையில் கூறியிருந்தார். சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதும் அந்த சலுகைகளில் எவ்வாறு நடைமுறை ரீதியில் வழங்க முடியும் என்ற கேள்வி எமக்குள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஏழாண்டுகள்...
ஆணைக் குழுக்களை அரசு ஏற்படுத்துகின்றபோது அவற்றில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் பிரதிநிதிகளை நியமிப்பது அவசியமாகும். அத்துடன், அரச நிறுவனங்கள், அரச திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் நிர்வாகக் கட்டமைப்புகளிலும் மேற்படி மூவின மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் பிரதிநிதித்துவங்கள் அவசியமாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம்,...
ஐங்கரநேசன் அவர்கள் மக்கள் பணியை நித்தம் செய்யும் செயற்பாட்டாளர். மக்களைக் குழப்புவதே முழுநேரத் தொழிலாகக் கொண்டு சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாண சபை...
வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட புதிய வரி முறைமையினால், மோட்டார் சைக்கிள்களின் விலை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு வீதம் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லையென மோட்டர் சைக்கிள் விற்பனை நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனங்கள் இதுவரையில், பழைய விலையிலேயே இறக்குமதி செய்து விற்பனை செய்து...
கடந்த காலங்களை போலல்லாது இம்முறை மாவீரர் வாரத்தை எவ்வித இடையூறும் இன்றி அனுஷ்டிக்கலாம் என பலத்த எதிர்பார்ப்புகள் காணப்பட்ட நிலையில், அதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார். உரிமைகளுக்காய் ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நினைவுகூருவதற்காக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதற்கென...
அரசியல் தீர்வென்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை இனத்திற்கும் அரசாங்கத்திற்கும் அவசியமான ஒன்றென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சாவகச்சேரியில் திறந்துவைத்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில் அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும்,...
வடக்கு மாகாணத்தில் 22ஆயிரம் பொருத்து வீடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான வீட்டுத் திட்டம் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்திலிருந்து 97 ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22ஆயிரம் வீடுகளை...
காஸ் சிலிண்டர் வெடித்ததில் மூதாட்டியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலக்கம் 302 கோவில் வீதி நல்லூரைச் சேர்ந்த சின்னத்தம்பி கொழுந்தியா என்ற 70 வயது மூதாட்டியொரு வரே உயிரிழந்தவராவார். எரிகாயங்களுக்குள்ளான குறித்த மூதாட்டி யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் போது வீட்டில் இருந்தவர்கள் எவ்வித காயங்களுமின்றி...
ரவிராஜ் தமிழ் மக்களிடம் மாத்திரமன்றி சிங்கள மக்களிடமும் செல்வாக்கு பெற்றிருந்தார். சிங்கள மக்கள் விளங்கக்கூடிய வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறினார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சாவகச்சேரியில் இடம்பெற்ற அமரர் ரவிராஜின் 10ஆவது ஆண்டு நினைவுதினத்தில் உரைய்ற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது...
Loading posts...
All posts loaded
No more posts
