Ad Widget

பெரும்பான்மை இனத்திற்கும் அரசியல் தீர்வு அவசியம்: சம்பந்தன்

அரசியல் தீர்வென்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை இனத்திற்கும் அரசாங்கத்திற்கும் அவசியமான ஒன்றென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சாவகச்சேரியில் திறந்துவைத்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில் அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதனை குழப்புவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டார்.

ஆகவே இச்சந்தர்ப்பத்தில் நிதானமாக செயற்படாவிட்டால் எதனையும் அடைய முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமாயின் இந்நாட்டிற்கு அரசியல் தீர்வென்பது இன்றியமையாதது என சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

Related Posts