க.பொ.த. உயர்தரத்தில் 24 பாடங்களை பயில கணிதம் சித்தி அவசியமில்லை

க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதம் சித்தியடையாத மாணவர்களும், கலைத்துறையில் தரம் 13 வரை கல்வி பயில்வதற்கு ஏதுவாக, புதிதாக 24 பாடங்களை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று (22) கல்வி அமைச்சர் இதனை அறிவித்துள்ளார். ரெபோடெக் தொழில்நுட்பம் உட்பட 24 பாடங்கள் இதன்போது அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கு...

யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார்!!

யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் பிறந்த தினத்தை கொண்டாடும் நோக்கில் மாணவர்கள் பலர் ஒன்றுகூடிய நிலையில், சுமார் இரவு 11 மணியளவில் திடீரென விடுதிக்குள் நுழைந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஏனைய மாணவர்களின்...
Ad Widget

21 அகதிகள் நாட்டை வந்தடைந்தனர்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 21 பேர் யு. என். எச். சி. ஆர் அமைப்பினால் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை 10 மணிக்கு, விமான மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த...

ஜனாதிபதிக்கும் மாகாண முதலமைச்சர்களுக்குமிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்குமிடையில் நேற்று (22) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஜனாதிபதியின உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தகலந்துரையாடலில் நிதிஅமைச்சர் ரவிகருணாநாயக்கவும் கலந்துகொண்டார். இங்கு மாகாணமட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் எதிர்காலதிட்டங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது மாகாண அமைச்சர்கள் தமது...

வவுனியாவில் முன்னாள் காவல் துறை அதிகாரி மர்மமான முறையில் கொலை

வவுனியாவில் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் அவருடைய வீட்டின் முன்னால் அவர் சடலமாகக் கிடந்ததை, அவருடைய வீட்டிற்கு மணல் ஏற்றிச் சென்ற வாகன சாரதியொருவர் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையில் பணியாற்றியிருந்து, இப்போது ஜெர்மனியில் குடியுரிமை பெற்றுள்ள 59 வயதுடைய விக்கிரமரட்ன...

தமிழ் மக்கள் பேரவையின் கொழும்பு ஊடகவியலாளர் மாநாடு(Video)

இன்று(22) கொழும்பில் நடைபெற்ற  வடக்கு தெற்கு உரையாடல்- தமிழ் மக்கள் பேரவையின்  பத்திரிகையாளர் மாநாட்டில் நடந்தது என்ன? https://www.facebook.com/virakesari/videos/10158046197130019/ நன்றி வீரகேசரி இணையம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்!

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திரத்தில் மாற்றங்களை செய்ய விரும்பும் மாணவர்கள் நவம்பர் 29ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். இந்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, பாடசாலை மூலம்...

வடக்கில் முளைக்கும் விகாரைகள் தொடர்பில் அலட்டிக் கொள்ள தேவையில்லை ; டி.எம்.சுவாமிநாதன்

தமிழர் பிரதேசங்களில் பலவந்தமாக வைக்கப்படும் புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகாரைகள் இந்து மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வரை அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் அனைத்து மதத்தினரதும் வழிபாட்டுத் தளங்களும் இருக்கும் நிலையில், வடக்கில் பௌத்த விகாரைகள் இருப்பதில் எந்தத்...

வெள்ளத்தில் மிதக்கும் பொம்மைவெளி

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம மக்கள், மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழை வெள்ளம் காரணமாக இப்பிரதேசத்தில் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே இதற்கு முக்கிய காரணம்' என யாழ். பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.றிஸ்வான்,...

பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு

பெண்ணொருவரின் 4½ பவுண் தாலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம், பண்டத்தரிப்பு பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த மேற்படிப் பெண்ணைப் பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், யாரும் இல்லாத நேரம் பார்த்து தாலிக் கொடியினை அறுத்தெடுத்துச் சென்றுள்ளனர். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலதிக விசாரணைகளை...

விடுவிக்கப்பட்ட காணியில் இருந்து வெடி பொருட்கள் மீட்பு

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் விடுவிக்கப்பட்ட காணியில் இருந்த வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மிதிவெடிகள் இரண்டும் எறிகனை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மழைகாலம் என்பதால் நீர் நிரம்பி இருக்கும் இடங்களை துப்பரவு செய்யும் போது இவை மீட்கப்பட்டுள்ளன. பொஸிஸ் விசேட பிரிவினருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலை அடுத்து மீட்கப்பட்ட...

கனேடியத் தமிழருக்கு நஸ்டஈடு வழங்க இலங்கைக்கு உத்தரவு

கனடாவின் டொரன்டோவில் வசிக்கும் ஒருவர் இலங்கைக்கு வந்திருந்தபோது, சித்திரவதை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில், நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு இலங்கைக்கு தீர்ப்பளித்துள்ளது. இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ரோய் சமாதானம் (46) என்பவர், 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் நாட்டுக்கு வந்திருந்தார். அந்த நேரத்தில்...

முகநூல் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்!

முகநூல் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் என இந்தக் குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்பய்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஆவா குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி...

நல்லிணக்கத்து பங்கம் விளைவித்தால் உடன் கைது!

மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரோதப் பேச்சுக்கள், அறிக்கைகள் விடுதல் போன்றவற்றினால் மக்களைத் தூண்டி விடும் விதமாக செயற்படும் நபர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களைத் தூண்டி விடுபவர்களை விசாரணை செய்ய...

சம்பந்தனுக்கு பாதுகாப்பு வேண்டும்!! த.தே.கூ உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கோரிக்கை

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பாதுகாப்பான வதிவிடமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தற்போதுள்ள வதிவிடத்தில் எதிர்கட்சித் தலைவர் வசிப்பதாக வரவுசெலவுத் திட்டம் மீதான குழு நிலைவிவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்...

வடமாகாண சபை உறுப்பினருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் முறுகல்!

வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் அவர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது. குறித்த முறுகல் நிலை வவுனியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இரண்டு மணித்தியாலங்களாக இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, வாகனம் ஒன்றில் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன்...

விசர்நாய் கடிக்கு உள்ளானவர் 5 மாதங்களின் பின் உயிரிழப்பு

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விசர்நாய் கடிக்கு உள்ளான நிலையில், உரிய மருத்துவ சிகிச்சை பெறத்தவறிய முதியவர் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு உயிரிழந்துள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. இச் சம்பவத்தில், அரியாலை யாழ்ப்பாணம் பகுதியினைச் சேர்ந்த சின்னத்துரை சிறிஅன்பழகன் (வயது 64) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு...

விபத்தில் ஐவர் படுகாயம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, பஸ்ஸூக்கு காத்திருந்த முதியவர்கள் மீது மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி உட்பட ஐந்து பேர், காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மதியம், மந்திகை சந்தியில் ஏற்பட்ட இந்த விபத்துச் சம்பவத்தில் கே.யோகராஜா (வயது 57), டி.உருத்திரகுமார் (வயது 57), ஏ.சிவனேஸ்வரராஜா (வயது52), எஸ்.தங்கவேல்...

திறமைக்கு பேதங்கள் இல்லை! பொலிஸ் துறையில் தமிழர்கள் இணைவது அவசியம்

திறமைக்கு மொழி, சமயம் அல்லது ஆண், பெண் என்ற பேதங்கள் இல்லை எனவும், அவ்வாறான பேதமற்ற, திறமைக்கு முன்னுரிமையளிக்கும் நிலையை பொலிஸ் துறையில் உருவாக்குவதே தமது அரசாங்கத்தின் நோக்கம் எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துரை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். இங்கு மேலும் அவர்...

6 வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதம் ரூ.25,000 வரை அதிகரிப்பு

வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, போதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் பாதைகளில் பயணித்தல், காப்புறுதி...
Loading posts...

All posts loaded

No more posts