Ad Widget

வடமாகாண சபை உறுப்பினருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் முறுகல்!

வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் அவர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது.

vavuniya-bus-stant-mayooran

குறித்த முறுகல் நிலை வவுனியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இரண்டு மணித்தியாலங்களாக இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

வாகனம் ஒன்றில் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வவுனியா பிரதான பேருந்து நிலையத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வர்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்றுள்ளார்.

அப்போது இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்று திருப்புவதற்கு இடம்போதாமையால் மாகாணசபை உறுப்பினரின் வாகனத்தை எடுக்குமாறு கோரியுள்ளார். இதன்போது இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு வடக்குமாகாணசபை உறுப்பினரும் வருகைதந்து தலையிட்டதால் பிரச்சனை முற்றி அங்கு நின்ற இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்கள், சாலை முகாமையாளர் ஆகியோர் ஒன்று சேர்ந்து வாகனத்தை அங்கிருந்து எடுக்குமாறு வற்புறுத்தியதையடுத்து முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து காவல்துறையினரிடம் முறையிடப்பட்டதன் பின்னர் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வருகை தந்து பிரச்சனையைத் தீர்த்துவைத்தனர்.

Related Posts