பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு

பெண்ணொருவரின் 4½ பவுண் தாலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம், பண்டத்தரிப்பு பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த மேற்படிப் பெண்ணைப் பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், யாரும் இல்லாத நேரம் பார்த்து தாலிக் கொடியினை அறுத்தெடுத்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts