காஸ் சிலிண்டர் வெடித்ததில் மூதாட்டியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இலக்கம் 302 கோவில் வீதி நல்லூரைச் சேர்ந்த சின்னத்தம்பி கொழுந்தியா என்ற 70 வயது மூதாட்டியொரு வரே உயிரிழந்தவராவார்.
எரிகாயங்களுக்குள்ளான குறித்த மூதாட்டி யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன் போது வீட்டில் இருந்தவர்கள் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.