Ad Widget

பொலிஸார் மீது மிளகாய்பொடி வீசி ஆயுதங்களை பறிக்க முயற்சி!!

யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் மீது, மிளகாய்பொடி வீசி ஆயுதங்களை பறிக்க முற்பட்ட சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியூடாக மண் கடத்தல் இடம்பெறுவதையடுத்து, கெட்டிசந்தி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பகல் கடமைக்கு 5 பேரும், இரவுக் கடமைக்கு 5 பேரும் என பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரவு 12 மணிளவில் நடந்து வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது, மிளகாய்பொடியை வீசிவிட்டு அவரிடம் இருந்த டி-56 ரக துப்பாக்கியை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர்.

தூக்கத்தில் இருந்த ஏனைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் விழித்துகொண்டதை அடுத்து ஆயுதங்களை பறிக்க வந்த கொள்ளையர்கள் காட்டுப்பகுதியூடாக தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts