Ad Widget

மரநடுகை மாதத்தை முன்னிட்டு வல்லை வெளியில் மரநடுகை

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வல்லை வெளியின் இருபுறங்களிலும் இன்று சனிக்கிழமை மரங்களை நடுகை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தொண்டைமானாறு வீரகத்தி மகாவித்தியாலய மாணவியொருவர் முதலாவது மரக்கன்றை நாட்டி மரநடுகையை ஆரம்பித்து வைத்துள்ளார்.

tree-1

தொண்டைமானாறு கடல்நீரேரி ஊடறுத்துச் செல்லும் தாழ்வான பகுதியாக வல்லைவெளி உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தால் மணல் மேடுகள் அமைக்கப்பட்டே மரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன.

tree-2

இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், க.தர்மலிங்கம், ச.சுகிர்தன், சி.அகிலதாஸ், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி வே.பிறேமகுமார், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி ந.சுதாகரன், கரவெட்டி பிரதேச செயலர் எஸ்.சிவசிறி ஆகியோரும் தொண்டைமானாறு வீரகத்தி மகாவித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரநடுகையில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் அவர்களது வீடுகளில் நடுகை செய்வதெற்கென பழமரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மரங்களை நடுகை செய்வதில் அரச திணைக்களங்கள் மட்டும் அல்லாது பொதுநிறுவனங்கள் மற்றும் பொதுமக்களும் உணர்வுபூர்வமாக ஆர்வம் காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts