Ad Widget

‘ஆவாவுக்கு புலி முத்திரை குத்த முயற்சி’

யாழ்ப்பாணத்தில் பல்வேறான கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரையை குத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய நீதித்துறை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, வடக்கில் உள்ள சாதாரண தமிழ் மக்களுக்கும் புலி முத்திரை குத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தினரை வேட்டையாடுவதாகவும் எம்மீது குற்றச்சாட்டொன்றுள்ளது. இந்த நாட்டில் சட்டமொன்று இருக்கிறது. இராணுவத்தினரை நாம் மதிக்கும் அதேநேரம், விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு உதவி புரிந்தமைக்காக மற்றும் உளவு பார்த்தமைக்காகவே சில இராணுவத்தினர் சிறைக்கு சென்றுள்ளனர். ஆகவே, தவறிழைத்தால் அவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டே ஆக வேண்டும்.

யுத்தத்தில், நல்லயுத்தம், கூடாத யுத்தம் என்றில்லை என்பதுடன் சமாதானத்திலும் நல்ல சமாதானம் கூடாத சமாதானம் என்றும் இல்லை. அத்துடன், கொள்ளை, கொலை மற்றும் பாலியல் குற்றங்களுடன் தொடர்புபட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள படைவீரர்களை, நாட்டைக்காத்த ரணவிருவா, என்று ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தும் குழுவினர். அதனை கைவிடவேண்டும். நல்லாட்சி அரசாங்கமானது படைவீரர்களுக்கு வழங்கவேண்டிய மரியாதையை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற, வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Posts