Ad Widget

மாமனிதர் நடராஜா ரவிராஜின் திருவுருவச்சிலை திறப்பு

கொழும்பு – நாரஹேன்பிட்டியில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் . நடராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ravi-raj

அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட சிலை சர்வமத வழிபாடுகளுடன் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

மாமனிதர்  நடராஜா ரவிராஜின் சிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண, லங்கா நவ சம சமாஜ கட்சியின் பொது செய லாளர் விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

திறந்து வைக்கப்பட்ட சிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாமனிதர்  ரவிராஜின் திருவுருவப் படம் சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்திற்கு கொட்டும் மழையிலும் எடுத்து செல்லப்பட்டுஅங்கு நினைவுஞ்சலிகூட்டம் இடம்பெற்றது.

வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நினைவுரைகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, நவலங்கா சமசமாஜக் கட்சி தலைவர் விககிரமபாகு கருனாரட்ன பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணைச் செயலாளர் நிஷாம் காரியப்பர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவருமான வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா ஆற்றினர்.

மேலும் மாமனிதர்  ரவிராஜ் நினைவாக நவீல்ட் பாடசாலை மாணவி ஒருவருக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது. அத்துடன் சிலையினை வடிவமைத்த யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட விரிவுரையாளர் மார்க்கண்டேயன் மனோகரன், உருவச்சிலை பீடத்தை அமைத்த கட்டடக் கலைஞர் நந்தகுமார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்,தர்மலிங்கம் சித்தார்தன் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண கல்வி அமைச்சர் குருகு லராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஆனால்ட்,சர்வேஸ்வரன், பரஞ்சோதி, முன்னாள் டிபேறிக் கல்லூரி அதிபர் கந்தையா அருந்தவபாலன் மற்றும் ரவி ராஜின் தாயார், மனைவி, மகள்,சகோதரி, மற்றும் மக்கள்என பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் நீதிபதி  விக்கினேஸ்வரன் , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் , அமைச்சர் மனோகணேசன்ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மாமனிதர் ரவிராஜின் சிலையின் அடிக்கல்லில் மாமனிதர் என்ற வாசகம் தவிர்க்கப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் பலராலும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது

15179094_331775963846247_5123801395972706099_n

இந்த சிலை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களது சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related Posts